பொது செய்தி

இந்தியா

சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
AirIndia, plane, Indian, Wuhan, வுஹான், ஏர்இந்தியா, கொரோனா, வுஹான், இந்தியா, மத்தியஅரசு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், வுஹான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஜப்பான், கொரியா, தைவான் மற்றும் நேபாள நகரங்களுக்கும் பரவியுள்ளது. இந்த நகரில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள். இது இந்திய அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் குறித்த நலன் மற்றும் தகவலை தெரிந்து கொள்ள சீனாவில் உள்ள நமது தூதரகம் ஹாட்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில், இந்த வைரஸ் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil newsநேபாளம் வரை இந்த வைரஸ் பரவியுள்ளதால், அதனை தடுப்பது மற்றும் எதிர்கொள்வது குறித்து கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் , குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்துவது எனவும், நேபாள எல்லையில் செக் போஸ்ட்களை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் வுஹான் நகரில் சிக்கியுள்ள 250க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வர சீனாவிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதற்கான பணியை வெளியுறவு அமைச்சகம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய விமானப்போக்குவரத்து துறை மற்றும் சுகாதாரத்துறை செய்து வருகிறது. இந்தியர்களை அழைத்து வர வுஹான் நகரில் இருந்து மும்பைக்கு போயில் 747 விமானத்தை இயக்க ஏர் இந்தியா தயார் நிலையில் உள்ளது. இதற்காக சீன அரசு, வுஹான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி கிடைத்தவுடன் சிறப்பு விமானம் இயக்கப்படும்.

இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். விமான ஊழியர்கள், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் தயாராக இருக்கின்றனர். வுஹான் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள், எப்படி விமான நிலையத்திற்கு வருவார்கள் என்ற சிக்கல் உள்ளது. இந்திய தூதரகத்தின் உதவியுடன் இதற்கான தீர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து, அனுமதி கிடைத்தவுடன், விமானம் இயக்கப்படும் . இவ்வாறு அவர்கள் கூறினர்.


சீனா சென்றவர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், கோவையில் இருந்து சீனா சென்று திரும்பிய 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும், 8 பேரும் 28 நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
28-ஜன-202021:25:09 IST Report Abuse
Sundar They should be kept in quarantine in China and get back to India after they are confirmed not affected by virus.There should not be any sentiment for the interest of Indians in India.
Rate this:
Cancel
28-ஜன-202016:09:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த நாடு என்ன செய்தது என்று சிலபேர் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்கள் , உலகில் எந்த நாட்டில் இந்தியர்கள் இருந்தாலும் நம் நாடு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது , பாதுகாப்பு அளிக்கிறது. வளைகுடாநாடுகளில் போர் ஏற்படும்போது கூட கப்பலை அனுப்பி இந்தியர்களை மீட்டது. இது நோய் பரவும் விஷயம் என்பதால் சீனாவின் ஒப்புதலை பெற காத்திருக்கிறது
Rate this:
Cancel
28-ஜன-202014:25:22 IST Report Abuse
chails ahamad Doha நம்முடைய மாணவர்களையும், இதர பணிகள் நிமித்தமாக சைனாவிற்கு சென்றுள்ள நம்முடையவர்களையும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அழைத்து வருவது அவசியமாகும், நேபாளத்திலும் இந்த கொரோனா பரவுவது நம்மையும் பாதிக்கவே செய்திடும் என்பதை எண்ணி மிகவும் மனதை கவலையடையவே செய்கின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X