கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழ், சமஸ்கிருதத்தில் தஞ்சை கோயில் கும்பாபிஷேகம்

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (75)
Advertisement
Thanjavur, ThanjaiPeriyaKovil,Court, Tamil, Sanskrit, தஞ்சாவூர், தஞ்சை, பெரியக்கோயில், கோர்ட், தமிழ், சமஸ்கிருதம், மொழி, கும்பாபிஷேகம், குடமுழுக்கு

இந்த செய்தியை கேட்க

மதுரை: தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின்னர், பிப்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழா, பூர்வாங்க பூஜையுடன் நேற்று (ஜன.,27) துவங்கியது. இதற்கிடையே, கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் நடத்தகோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல், தொல்லியல் துறையின் அனுமதி பெறாததால் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என புதிய மனுவும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (ஜன.,27)நடைபெற்றது.




வழக்கு விசாரணையின் போது, கடந்த நவம்பர் மாதமே 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை வாதிட்டது.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கும்பாபிஷேகத்தை தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியிலும் நடத்தப்படும். இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கும்பாபிஷேகம் என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், கும்பாபிஷேகத்திற்கு தடைக்கோரிய வழக்கையும் முடித்து வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
29-ஜன-202000:21:20 IST Report Abuse
Allah Daniel இங்க சில சொம்புங்ககிட்ட இருந்து, ஒரே பகுத்தறிவா பிச்சிகிட்டு ஓடுது...ஏன் எல்லா மசூத்தில ‘இனி தமிழில் மட்டுமே ஓத படும்’னு போர்டு வைக்க சொல்லு பாப்போம்...
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
29-ஜன-202000:18:29 IST Report Abuse
Allah Daniel ////வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா 28-ஜன-2020 19:42 எல்லா கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்ட் உள்ளது அப்படி இருக்கையில் குடமுழுக்கு ஏன் பண்ண கூடாது//// அட பகுத்தறிவு பம்புசெட்டே, ஏன் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மசூதிகளிலும், இனி தமிழிலேயே ‘ஓத’ வேண்டும் சொல்லு பாப்போம்...அட சொல்லித்தான் பாரு...
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜன-202022:42:04 IST Report Abuse
Tamilan தமிழுக்கு மறுபெயர் டுமீல் என்றும் கூறலாம் . அப்படி இருக்கும்போது கோவில் வரை எடுத்துச்செல்வது ஏன் ?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X