பொது செய்தி

தமிழ்நாடு

விழுந்தது வெங்காய விலை; சாம்பார் பிரியர்கள் மகிழ்ச்சி

Added : ஜன 28, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளதால், சாம்பார் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சமையலில் வெங்காயம் இல்லாத உணவு பொருளே இல்லை என்பது போல, மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபமாக இதன் விலை ஏற்றம், அனைத்து தரப்பு மக்களையும் கண்ணீர் விட வைத்தது. கடந்த சில மாதங்களாக பெரிய வெங்காயம் மற்றும் சின்ன
Onion, Price, Falls, வெங்காயம், விலை, குறைவு, சாம்பார், மகிழ்ச்சி,

இந்த செய்தியை கேட்க

சென்னை: கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளதால், சாம்பார் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமையலில் வெங்காயம் இல்லாத உணவு பொருளே இல்லை என்பது போல, மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபமாக இதன் விலை ஏற்றம், அனைத்து தரப்பு மக்களையும் கண்ணீர் விட வைத்தது. கடந்த சில மாதங்களாக பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 200 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் முதல் ஆம்ளேட் பிரியர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். ஹோட்டலில் வெங்காயத்துடன் , முட்டை கோஸ் சேர்க்கப்பட்டது; பல வீடுகளில் சாம்பார் வைப்பதையே தவிர்க்கும் நிலையில் இருந்து வந்தனர்.


latest tamil news


வெங்காய விலை உயர்வு மற்றும் தட்டுபாட்டை போக்க, எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து அரசு நேரடியாக வெங்காயம் இறக்குமதி செய்தாலும் விலை குறையாமல் இருந்து. தற்போது பல பகுதியில், வெங்காயம் அறுவடை செய்யப்படுவதால் வரத்து அதிகரித்து, இதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. ஜனவரி தொடக்கத்தில், ரூ.170க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயத்தின் விலையும் ஏறக்குறைய இதே விலையிலேயே விற்கப்படுகிறது. இதனால், சில மாதங்களாக சாம்பார்களில் 'ஆப்சென்ட்' ஆன வெங்காயம், தற்போது 'பிரசண்ட்' ஆகியுள்ளது. இதனால், சாம்பார் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜன-202010:19:06 IST Report Abuse
Bhaskaran எடப்பாடி வெங்காயம் எகிப்திலிருந்து இறக்குமதி செய்ய ஏற்பாடுகள்செய்து விநியோகம் செய்யப்பட்டது உண்மை
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
29-ஜன-202002:45:23 IST Report Abuse
Mahesh அதற்குள் ஏதோ உலகமே அழியப்போவதுபோல் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன...
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
28-ஜன-202022:17:04 IST Report Abuse
Sundararaman Iyer நிறைய பேர் வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள். உண்மையில், வெங்காயம் சாப்பிட்டால் நீரிழிவு வியாதி வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X