பொது செய்தி

இந்தியா

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தலாய் லாமா அறிவுரை

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (8)
Advertisement

தரம்சாலா:சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 'ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை சொல்லுங்கள் என திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.







106 பேர் பலி


கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து சீனாவில் இதுவரை 106 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 4515 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி இமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் ' ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும், என தலாய் லாமா தெரிவித்தார்.
மேலும், அந்த மந்திரத்தை அவர் உச்சரிப்பது போன்ற வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
29-ஜன-202016:05:32 IST Report Abuse
venkatan மந்திரங்கள் மட்டுமே நோயை கட்டுப்படுத்த இயலாது..மனித மனம் செம்மை பட்டு தன்னம்பிக்கை கூடி இந்த மாதிரியான வைரஸ்களை கொல்ல இயற்கை மூலிகைகளில் மருந் து தேட வேண்டும்..மந்திரம்...மணி..ஒளஷதம்...என்று ஒரு வார்த்தையும் உண்டு..
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-202003:58:57 IST Report Abuse
J.V. Iyer நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பினார் கெடுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ஹரி -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-202001:33:49 IST Report Abuse
ஹரி திபெத்தை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடு பட மந்திரம் உங்க ஆளுங்களுக்கு சொல்லி கொடுங்கள்.... நீங்களும் நல்ல சுகமான வாழ்க்கை நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X