பொது செய்தி

இந்தியா

" முள்ளுங்க குத்திச்சு அவ்வளவுதான் " - ரஜினி

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (84+ 19)
Advertisement
#Rajinikanth# #Minor Injuries#  #'Man vs Wild'#'மேன் வெர்சஸ் வைல்ட்', படப்பிடிப்பு, நடிகர் ரஜினி, காயம்

பெங்களூரு: 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. சூட்டிங் முடித்து சென்னை திரும்பிய ரஜினி , எந்த காயமும் ஏற்படவில்லை. லேசா முள்ளுங்க குத்திச்சு என கூறினார்.

பியர் கிரில்ஸ் என அனைவராலும் அறியப்படும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ், பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது வனப்பகுதியில் பிரபலங்களுடன் சுற்றி வரும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சியின் அடுத்த சீசனை நேஷனல் ஜியோக்ரபி சேனல் , 'ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' என்ற பெயரில் ஒளிப்பரப்ப இருப்பதாக அறிவித்தது. இதில், ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப்போவதாக நேற்று (ஜன.,27) ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபூர் புலிகள் வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பில், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நடிகர் ரஜினி பங்கேற்றுள்ளார். இதற்காக இன்றும், ஜன.,30ம் தேதியும் தலா 6 மணிநேரம் படப்பிடிப்பு நடத்த வனத்துறை அனுமதி அளித்துள்ளது இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில், டிஸ்கவரி அல்லது நேஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரஜினிக்கு லேசான காயம்


இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ரஜினி மறுத்தார்

இது குறித்து இரவில் ரஜினி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்: 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஷோவுக்கான சூட்டிங் முடித்து திரும்பி வருகிறேன். எனக்கு ஏதோ பெரிய காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபோல் எதுவும் இல்லை. சும்மா முள்ளுங்க லேசாக குத்திச்சு அவ்வளவுதான், வேறு பெரிய காயம் ஏதுமில்லை என சிரித்தபடி கூறி விட்டு சென்றார் ரஜினி.

Advertisement
வாசகர் கருத்து (84+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vanakamudi - karur,இந்தியா
29-ஜன-202011:38:16 IST Report Abuse
vanakamudi என்னய்யா ராஜா சின்ன ரோஜா ல யானைக்கே வைத்தியம் பாத்தாரு முள்ளு குத்தியத்துக்கு இப்ப திரும்பி வராரு
Rate this:
Share this comment
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
29-ஜன-202011:34:50 IST Report Abuse
Fardhikan என்னதான் பில்டப் கொடுத்தாலும் ஒன்னும் கதைக்காவது
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
29-ஜன-202011:23:42 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இவனுக்கு எதுக்கு முள்ளு குத்தினதுக்கு இந்த BUILT UP அங்கே நம் ராணுவ வீரர்கள் பணியில் இருந்து நாட்டை காக்கிறார்கள் அவர்கள் விஷயம் வருவதில்லை இவன் என்ன சும்மாவா போய் இருப்பான் கோடி கணக்கில் பணம் வாங்கி கொண்டு தான் நடிக்க போய் இருப்பான் என்னவோ சமூக சேவை செய்தார் போல இவனுக்கு ஒரு இடம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X