மோடியிடம் கேள்வி கேளுங்கள் :இளைஞர் மாநாட்டில் ராகுல் ஆவேசம்

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (37+ 164)
Advertisement
மோடி,கேள்வி ,கேளுங்கள் ,இளைஞர் , ராகுல் ,ஆவேசம்

ஜெய்பூர் : ''இந்தியா அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட நாடு என்ற நற்பெயருக்கு, பிரதமர் மோடி களங்கம் விளைவித்துள்ளார். இதை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களின் குரல் ஒடுக்கப்படுவதை, ஒரு நாளும் அனுமதிக்க கூடாது,'' என, காங்கிரஸ் - எம்.பி., ராகுல் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில், வேலையில்லா திண்டாட்டம் குறித்து, இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட, காங்கிரஸ் - எம்.பி., ராகுல் பேசியதாவது:இந்தியா அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட நாடு என்ற பெயருக்கு, பிரதமர் மோடி, களங்கம் விளைவித்துள்ளார்.உலக அரங்கில், இந்தியாவுக்கு, பாலியல் பலாத்கார தலைநகரம் என்ற அவப்பெயர் கிடைத்துள்ளது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா வர தயங்குகின்றனர். இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என, பா.ஜ., அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த ஆண்டில் மட்டும், ஒரு கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். இது பற்றி இளைஞர்கள் கேள்வி எழுப்பினால், துப்பாக்கி தோட்டாக்களால், அவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
இந்த நாட்டின் விலை மதிப்பில்லா சொத்தாகவும், பலமாகவும் இருப்பது இளைஞர்கள் தான். சீனாவுக்கு நிகராக போட்டி போடக்கூடிய திறன் உடைய இளைஞர்களை, இந்த அரசு வீணடித்துக் கொண்டு இருக்கிறது.
இனியும் உங்கள் குரல்கள் ஒடுக்கப்பட கூடாது. வேலையில்லா திண்டாட்டம், நம் நாட்டின் எதிர்காலம் குறித்து, இந்த அரசிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (37+ 164)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varipuli - VaigaiCity,இந்தியா
30-ஜன-202016:44:47 IST Report Abuse
Varipuli எப்படி , பப்புவை உன்னை ஏன் இன்னும் ஜெயிலில் போடவில்லை என கேட்கலாமா?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஜன-202015:57:56 IST Report Abuse
Endrum Indian மிக மிக சரி. பதில் சொல்லத் தெரிந்தவரிடம் தானே கேள்வி கேட்க முடியும். பப்புவுக்குத் தெரிந்தது வெறும் கேள்வி கேட்கத்தான் எந்த கேள்விக்கும் பதில் தெரியாது அதைத்தான் இவ்வளவு தெளிவாக சொல்கின்றார். என்ன பெரோஸ் கானின் வாரிஸ் சரிதானே நான் சொல்வது
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
30-ஜன-202015:39:11 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி ஒரு முஸ்லீம் பெரோஸ் கானின் பேரன் எப்படி பேசுவான் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X