குற்றப் பின்னணி வேட்பாளரை நிறுத்த தடை வருமா?சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (4)
Advertisement
குற்றப் பின்னணி,வேட்பாளர், அரசியல் கட்சி, தடை, 
சுப்ரீம் கோர்ட், மனு

புதுடில்லி :'குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த, அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற நபர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது, ஜனநாயகத்துக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் பேராபத்தை ஏற்படுத்தும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பா.ஜ., வைச் சேர்ந்தவரும், பிரபல வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில், இது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டில், மிக தீவிரமான குற்றங்களில் ஈடுபட்டோர், டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, ஆசிரியராகவோ, ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரியாகவோ, நீதிபதியாகவோ முடியாது. அந்த அளவுக்கு சட்டம் கடுமையாக உள்ளது.

ஆனால், குற்றப் பின்னணி உடையவர்கள், எளிதில், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர் போன்ற பதவிகளை வகித்து விடுகின்றனர்; இது, மிக மோசமான முன் உதாரணமாக உள்ளது. மேலும், ஜனநாயகத்துக்கும், சட்டம், ஒழுங்கிற்கும் பேராபத்தை விளைவிக்கும் செயல். ஏனெனில், மக்கள் பிரதிநிதிகளில் பலர், மிக கடுமையான குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, குற்றப் பின்னணி உடையவர்களை வேட்பாளராக நிறுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வி தகுதி, அவர்களது குற்றப் பின்னணி உள்ளிட்ட எல்லா தகவல்களையும், அவர்களது இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, 24 மணி நேரத்துக்கு முன்பிருந்து, ஓட்டுப் பதிவு நடக்கும் தேதிவரை இடம் பெறச் செய்யும்படி உத்தரவிட வேண்டும்.
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து, அதிகம் விற்பனையாகும் மூன்று நாளிதழ்களில், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் விளம்பரம் வெளியிடும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதவிர, மக்களால் அதிகம் பார்க்கப்படும் செய்தி சேனல்களில், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன், காலை, 9:00லிருந்து, மாலை, 9:00 மணிக்குள், இதுகுறித்த விபரங்களை ஒளிபரப்ப வேண்டும்.

தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தைனைகளில், 'அரசியல் கட்சிகள், குற்றப் பின்னணி உடையவர்களை தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்தக் கூடாது' என்ற வாசகங்களை சேர்க்க வேண்டும். மேலும், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான விதிமுறைகளில், குற்றப் பின்னணி உடையவர்கள் யார் என்பதற்கான விளக்கம் இடம் பெற வேண்டும். அதிகபட்சம் ஐந்து ஆண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கும் வகையிலான குற்றங்களில் ஈடுபட்டோர், குற்றப் பின்னணி உடையவர்கள் என்பதை அதில் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வேட்புமனு பரிசீலனை நாளுக்கு, குறைந்தது ஒரு ஆண்டுக்கு முன்னதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அம்சமும் அதில் இடம் பெற்றிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரிக்கலாம். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-ஜன-202003:13:45 IST Report Abuse
Rajagopal ஓட்டுக்குப் பணம் கொடுப்பது நிரூபிக்கப் பட்டால், உடனே அந்த வேட்பாளர் பத்து வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் நிற்க முடியாது, வென்றிருந்தால், அது ரத்து செய்யப் பட்டு, ஓட்டுகளில் அடுத்த படியாக அதிக எண்ணிக்கை இருப்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட வேண்டும். இரண்டு முறை இந்த மாதிரி பிடிபட்டால் நிரந்தரத் தடை, சிறை வாசம் என்று சட்டம் வைக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால், திருடர்கள் எல்லா காட்சிகளிலும் இருக்கிறார்கள், இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
29-ஜன-202009:10:55 IST Report Abuse
RajanRajan அட போங்கப்பா. குற்றப்பின்னணி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் வேட்புமனு தாக்கல் செய்ய தடை மீறி தாக்கல் செய்தால் பத்து வருடம் கடுங்காவல் தண்டனை என்று சட்டம் போட்டு உடனடியா கோட்டில் ஆஜர் படுத்தி உள்ளே தள்ளுங்கள். எவன் வேட்புமனு தாக்கல் செய்வான் என்று பார்க்கலாம். அதுபோல MLA MP ஆனப்புறம் குற்றப்பின்னணி சித்து வேலைகளில் ஈடுபட்டால் தேர்தல் ஆணையம் உடனடி பதவி நீக்கம் செய்து கோர்ட் பத்து வருட கடுங்காவல் தண்டனையை அமல் படுத்தி உடனடி தீர்ப்பு வழங்கி விட வேண்டும். நோ ஜாமீன் வாய்த்த தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புகள். தெளிவா சட்டம் போட்டு அந்த நூல் கட்டி சட்டத்தை இழுக்கிற வக்கீல் ஜுட்ஜ் வித்தைகளை முடிவு காட்டுங்கள். கூடவே குற்ற பின்னணி உள்ளவர்கள் மக்கள் பிரதிநிதி ஆனால் தேர்வாணையம் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் தெளிவா எளிமையா ஒரு சட்டம் போடுங்கப்பா. எவன் தப்பு பண்ணுறான்னு ஒரு கை பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
29-ஜன-202006:57:51 IST Report Abuse
blocked user உருப்படியான விஷயம். ஏற்கனவே உள்ளே பாராளுமன்றத்தில் இருக்கும் கிரிமினல்களை வெளியே அனுப்ப நீதித்துறை விரைவாக அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குக்களை விசாரித்து தீர்ப்பு சொல்லி ஒத்துழைக்க வேண்டும். BC யின் வழக்கை விசாரிக்கக்கூட தடை கொடுக்கிறதாம் ஒரு நீதிமன்றம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X