அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 புதிய மருத்துவ கல்லூரிகள்:மோடிக்கு முதல்வர் இ.பி.எஸ்.,நன்றி

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (19)
Advertisement

சென்னை:தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சியில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.






தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் 9 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருந்தது.
இந் நிலையில் தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.





மத்திய அரசு 60 சதவீத நிதி, மாநில அரசு 40 சதவீத நிதி பங்களிப்புடன் இரு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கின்றன.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை என்றும் இதற்கென ஆகும் 3575 கோடி ரூபாயில் 2145 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் பங்காக 1430 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-202013:07:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
29-ஜன-202012:14:17 IST Report Abuse
Mano சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
29-ஜன-202011:52:42 IST Report Abuse
Rengaraj மருத்துவ ஆராய்ச்சி இன்று இந்தியாவுக்கு தேவையான ஒன்று. தொலைநோக்கு பார்வையோடு இதை அணுக வேண்டும். தமிழகத்தில் இத்தனை மருத்துவ கல்லூரிகள் இருக்கும்போது அதன் மூலம் தமிழகம் மருத்துவ உலகில் தலை சிறந்த முதல் மாநிலமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது . தகவல் தொழில்நுட்பம் மூலம் சென்னை , கோவை, நிறைய வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன. மருத்துவமும் தொழில் நுட்பமும் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை மேலும் வழங்கும். அந்த அளவுக்கு நாம் நம் மாணவர்களை கல்வி புரட்சி மூலம் தயார் செய்ய வேண்டும். இல்லாவிடில் பிற மாநிலத்தவர்கள் அந்த இடத்தை பிடிக்க ஆரம்பித்து விடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X