கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (40+ 77)
Advertisement
Tankore, Big_temple, kumbabisekam, Tamil, Stalin,  Investication, பெரியகோவில், தஞ்சை, குடமுழுக்கு, மனுதாக்கல்

மதுரை : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஆகம விதிகள்படி தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் மன்னர் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் 1003 மற்றும் 1010 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. நமது பழங்கால கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. தற்போது கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது நடைமுறையில் உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு பிப்.,5 ல் நடைபெற உள்ளது. இதை தமிழ் முறைப்படி நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு திருமுருகன் மனு செய்தார். இதுபோல் தஞ்சாவூர் செந்தில்நாதன், மணியரசன் மனு செய்தனர்.
மதுரை வழக்கறிஞர் சரவணன் தரப்பில்,'தஞ்சாவூர் பெரிய கோயில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. அதன் அனுதியின்றி, கோயிலில் முடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும்,' என மனு செய்தார். அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் பொதுச் செயலாளர் முத்துக்குமார்,'பாரம்பரிய ஆகம மரபுப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்.

திருமுருகன் வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக இணைத்து, எங்கள் கருத்தையும் கேட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என மனு செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.தமிழக அறநிலையத்துறை செயலாளர் பதில் மனு:தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1980 மற்றும் 1997 ல் பாரம்பரிய நடைமுறைப்படி குடமுழுக்கு நடந்தது. மதம் மற்றும் பாரம்பரிய நடைமுறையை பின்பற்றி பிப்.,5 ல் குடமுழுக்கு நடத்தப்படும்.
பிப்.,1ல் துவங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.,5ல் நடக்கும் குடமுழுக்கு வரை தமிழில் திருமுறை பாராயணம், பன்னிரு திருமுறை, அபிராமி அந்தாதி, திருப்புகழ் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாக கூறுவது சரியல்ல. குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும். ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழ் திமுருறைகள் பாட ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 2 ஓதுவார்கள் இக்கோயிலில் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடமுழுக்கின்போது திருமுறைகள் பாட கூடுதலாக 80 ஓதுவார்கள் ஈடுபடுத்தப்படுவர். தமிழுக்கு மேலாக சமஸ்கிருதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

தமிழ், சமஸ்கிருதத்திற்கு சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குடமுழுக்கு அழைப்பிதழில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார். அரசுத்தரப்பில்,'குடமுழுக்கு நடத்த தற்காலிக பந்தல் குறிப்பிட்ட பரப்பளவில் அமைக்க வேண்டும். விழா முடிந்ததும் அவற்றை அகற்ற வேண்டும். தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்க வேண்டும். போதிய போலீஸ் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

பார்வையாளர், பக்தர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பன உட்பட 15 நிபந்தனைகளுடன் மத்திய தொல்லியல்துறை அனுமதித்துள்ளது,' என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள்,'மத்திய தொல்லியல்துறையின் அனுமதியின்றி முடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும்,' என்ற மனுவை பைசல் செய்தனர். மற்ற மனுக்கள் மீது அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று (ஜன.,29) ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (40+ 77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mal - Madurai,இந்தியா
29-ஜன-202021:37:15 IST Report Abuse
Mal With respect to Tanjore temple kumbabisekham controversy... Organise a protest against all churches n christian educational institutions...ask them to demolish churches ..... Jesus was not born here in India n he doesn't know Tamil... Can we shut down all churches n christian missionaries named schools....or can we rename all christian institutions with Tamil poets name ??? Start a protest against all christian named institutions... They don't carry Tamil names.... Nor have they contributed to India or Tamil language...why should we have their names in tamilnadu...paul, peter, Xavier..
Rate this:
Share this comment
Cancel
Balaji Balasubramanian - chennai,இந்தியா
29-ஜன-202018:21:48 IST Report Abuse
Balaji Balasubramanian மரபு என்பது காக்கப்படவேண்டிய ஒன்று ,இறை இடம் விளையாடல் கூடாது
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
29-ஜன-202016:11:06 IST Report Abuse
dandy இந்த சோழ மன்னர்கள் காலத்தில் தமிழருக்கும் ..தமிழுக்கும் உண்மையில் என்ன செய்தார்கள் ....? சம்ஸ்கிருதம் தூக்கி பிடிக்க பட்டது ..அரச அலுவல் மொழி பாளி மொழியில் இருந்தது ,,இந்த சோழர்கள் அன்று தமிழையும் ..தமிழர்களையும் ஒரிசா முதல் ..இந்தோனேஷியா வரை பரப்பி இருந்தால் இன்று ஆசியாவில் எத்தனையோ தமிழ் அரசுகள் இருந்து இருக்கும் ...மாறாக இவர்கள் வென்ற நாடுகளில் சமஸ்கிரதம் அறிமுக படுத்த பட்டது இதனால் இன்று பர்மிய ,,தாய் ..மலாய் ..இந்தோனேஷியா மொழிகளில் சம்ஸ்கிருத செல்வாக்கு அதிகம் ...சோழர்கள் செய்த தமிழ் சேவை இவ்வளவே ..சென்றார்கள் ..வென்றார்கள் ..உண்டார்கள் ..திரும்பி வந்தார்கள் ..கேவலம் பக்கத்து நாடான மாலைதீவு ..இலங்கை நாடுகளில் கூட பெருமளவு தமிழர்களை குடியேற்ற வில்லை ஆனால் தெலுங்கன் ஆட்சி வந்ததும் ..தெலுங்கர்களை குடியேற்றி டாஸ்மாக் நாட்டிடை ஆளும் அளவிற்கு வைத்தார்கள் தீர்க்கதரிசனத்துடன் ..உண்மையில் சோழர்கள் எந்த நாடுகளையும் வெல்ல வில்லை ...
Rate this:
Share this comment
Ganesh G - Hyderabad,இந்தியா
29-ஜன-202016:31:49 IST Report Abuse
Ganesh G//ஆனால் தெலுங்கன் ஆட்சி வந்ததும் ..தெலுங்கர்களை குடியேற்றி டாஸ்மாக் நாட்டிடை ஆளும் அளவிற்கு வைத்தார்கள் தீர்க்கதரிசனத்துடன் ..// இந்த வரி இங்க எதுக்கு வந்தது என்று புரியவில்லை. முடிவா என்ன சொல்ல வரீங்க...
Rate this:
Share this comment
Ganesh G - Hyderabad,இந்தியா
29-ஜன-202016:34:19 IST Report Abuse
Ganesh Gநீங்க கொஞ்சம் வரலாறு புத்தகத்தை புரட்டி பாத்துட்டு கருத்து சொல்லுறது நல்லது....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
29-ஜன-202019:16:44 IST Report Abuse
dandyடாஸ்மாக் நாட்டிற்கு வெளியே உள்ள நாடுகளில் வரலாறு தெரிந்த படியால் தான் எழுதுகின்றேன் ..மாலை தீவில் முதலில் குடியேறியவர்கள் தமிழர்கள் ...அங்கு இஸ்லாம் 11 ம் நூற்றாண்டில் அதாவது சோழ ஆட்சி உச்ச கட்டத்தில் இருந்த போது தான் பரவியது ..சோறு கண்ட இடம் சுவர்க்கம் என்று இருந்த சோழர்கள் இதை தடுக்கவில்லை ..தமிழர்களை குடியேற்ற ஊக்குவிக்கவில்லை ..தாய்லாந்து மொழியில் 60 % சமஸ்கிருதம் தெரியுமா ?...
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
29-ஜன-202019:26:45 IST Report Abuse
dandy1907 ம் ஆண்டு வெளிவந்த "தமிழர்களின் 1800 " ஆண்டு வரலாறு என்ற புத்தகம் வந்த பின்னரே இந்த சோழர்கள் பற்றி தெரிந்து கொண்டார்கள் ..அன்றைய கால கட்டத்தில் சிலப்பதிகாரம் பற்றி எவரும் கேள்வி பட்டு இருக்கவில்லை ...கோவலன் கதை என்று சில பகுதிகள் நாடோடி கதைகளாக அன்று உலவினவாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X