பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (17)
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்க அரசுக்கும், மாநில கவர்னருக்கும் இடையேயான மோதல், மோசமான கட்டத்துக்கு சென்றுள்ளது. குறிப்பிட்ட சில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால், கோல்கட்டா பல்கலை பட்டமளிப்பு விழாவில் இருந்து, மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் வெளியேறினார்.







புதிய விதிகள்


மேற்கு வங்க மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதில் இருந்து, ஜகதீப் தங்கருக்கு எதிராக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும், அவருடைய அமைச்சர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.மாநிலத்தில் உள்ள பல்கலைகளின் வேந்தராகவும் கவர்னர் உள்ளார். ஆனால், வேந்தருக்கான சில அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், சட்டசபையில் புதிய விதிகளை, மம்தா பானர்ஜி அரசு கொண்டு வந்தது. அதன்படி, பல்கலை விவகாரங்களில் கவர்னர் நேரடியாக தலையிட முடியாது.





மாநில உயர்கல்வி அமைச்சர் மூலமாகவே, உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இந்த நிலையில், கோல்கட்டா பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், நோபல் பரிசு வென்ற, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, அபிஜித் பானர்ஜிக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, வேந்தர் என்ற முறையில், கவர்னர் ஜக்தீப் தன்கர் வந்தார்.






கோஷம்


அவர் வரும்போதே, மாணவர்கள் சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். திரும்பி போகும்படி கோஷமிட்டனர். மேலும், சி.ஏ.ஏ., குறித்து விமர்சித்து பேனர்களையும் கையில் வைத்திருந்தனர். மேடைக்குச் சென்ற அவர், அதன் பின்பகுதியில், அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், மாணவர்கள் சிலர், மேடையில் ஏறி, கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர். அதையடுத்து, அவர், விழா அரங்கிலிருந்து வெளியேறினார்.

வேந்தர் இல்லாமலேயே, பட்டமளிப்பு விழா நடைபெற்றது.'கோல்கட்டா பல்கலையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வுகள், மிகச் சிறந்த கலாசாரம் உள்ள மேற்கு வங்க மாநில மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு உறுத்தலாக இருக்கும். 'கலாசாரம் மற்றும் சபை மாண்பை சமரசம் செய்தவர்கள், அவர்களுடைய குணங்களை இங்கு பிரதிபலித்துள்ளனர்' என, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-202013:04:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மமதாவின் ரவுடித்தனம் இன்னும் எத்தனை நாளைக்கு ? பார்க்கலாம்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
29-ஜன-202020:36:26 IST Report Abuse
Nallavan Nallavanஅராஜகத்துக்கு முமைதா பேகம் மட்டுமே முழுப் பொறுப்பல்ல ..... மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தையே இடதுசாரிகள் இப்படி மாற்றியமைத்திருக்கிறார்கள் .......
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
29-ஜன-202010:46:58 IST Report Abuse
RajanRajan மேற்கு வங்கத்தில் இப்போது ரோஹிங்கியா பங்காளதேஷிகள் ஆட்சி நடக்கிறது. இந்திய ஜனநாயக போர்வையில் ஜனநாயகம் எப்பவோ படுகொலை செய்யப்பட்டு விட்டது .
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
29-ஜன-202010:03:25 IST Report Abuse
krishna மம்தா பேகம் விட்டால் வெஸ்ட் BENGALAI பங்களாதேஷ் உடன் இணைக்கும் திறமை உள்ள தேச விரோதி. இந்த அம்மாவின் ஆட்சி துடைத்து எறியப்பட்டு பிஜேபி அஞ்சு வருஷம் ஆட்சிக்கு வந்தால் 50 லக்ஷம் பங்களாதேஷி வந்தேறிகள் இங்கிருந்து BANGLADESHUKKU துரத்தி எறியப்பட்டால் வங்கம் முன்னேறும்.இப்போது மக்கள் மிக கேவலமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X