பொது செய்தி

இந்தியா

முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020
Advertisement
Ranji,cricket,hattrick,wicket

இந்துார்: முதல் தர அறிமுக போட்டியின் முதல் ஓவரில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்து உலக சாதனை படைத்தார் ம.பி., அணியின் ரவி யாதவ்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் (ம.பி.,), உ.பி., அணிகள் இந்துாரில் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் ம.பி., அணி 230 ரன்கள் எடுத்தது. உ.பி.,யை சேர்ந்த ரவி யாதவ் 28, ம.பி., அணியில் அறிமுகம் ஆனார். இவர், தனது முதல் ஓவரில் 3, 4, மற்றும் 5வது பந்தில் ஆர்யன் (13), அன்கித் (0), சமீரை (0) அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உ.பி., அணி முதல் இன்னிங்சில் 216 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது நாள் முடிவில் ம.பி., அணி இரண்டாவது இன்னிங்சில் 105/3 ரன்கள் எடுத்து 119 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.







உலக சாதனை:



இதையடுத்து முதல் தர அறிமுக போட்டியில் முதல் ஓவரில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என உலக சாதனை படைத்தார் ரவி யாதவ். இதற்கு முன் இந்தியாவின் ஸ்ரீநாத், சலில் அங்கோலா, அபிமன்யு மிதுன் உள்ளிட்ட 7 இந்திய வீரர்கள் அறிமுக போட்டியில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினர்.

சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் ரிக்கி பிளிப், 1939-40ல் முதல் 3 போட்டியில் பவுலிங் செய்யவில்லை. 4வது போட்டியில் முதன் முறையாக பந்து வீசிய ஓவரில் இதுபோல சாதித்தார். மற்றபடி, அறிமுக போட்டியில், முதல் ஓவரில் அசத்தியது ரவி யாதவ் மட்டும் தான்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X