பொது செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரிகள் கண்காணிப்புக்கு புதிய விதிகள்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (2)
Advertisement
மணல் குவாரி, கண்காணிப்பு, புதிய_விதிகள்,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், ஒப்புதல்

சென்னை : தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் அமைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளன.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய ஒப்புதல் இன்றி புதிய மணல் குவாரிகள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி பெற முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் தனியார் பட்டா நிலங்களில் மணல் எடுப்பதாக கூறி ஆற்று படுகைகளில் மணல் திருட்டு நடக்கிறது.

இந்த பின்னணியில் ஆற்று மணல் குவாரிகளை அனுமதிப்பது அமைப்பது பயன்படுத்துவது கண்காணிப்பது தொடர்பாக புதிய வழிகாட்டி விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


புதிய கட்டுப்பாடுகள்



* புதிய மணல் குவாரிகள் அமைக்க தேர்வு செய்யப்படும் இடத்தை குடிநீர் வாரியம் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்

* ஆற்று படுகைகளில் பாலங்கள் அணைகள் சாலைகள் குடியிருப்புகள் போன்ற இடங்களின் அருகில் மணல் குவாரிகளை அனுமதிக்க கூடாது

* மணல் குவாரிகள் தொடர்பாக 2016ல் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும்

* மணல் குவாரி அமைக்கப்படும் இடத்தை 24 மணி நேரமும் கேமரா மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

* குவாரிகளில் எடுக்கப்படுவது முதல் பயனாளியிடம் சேர்க்கப்படும் வரை மணல் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

* ஆற்றுப்படுகையில் எந்தெந்த இடங்களில் மணல் எடுக்க கூடாது என்பதும் தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்; மணல் குவாரிகளின் எல்லைகள் நிரந்தரமாக அடையாளப் படுத்தப்பட வேண்டும்

* ஆற்றுபடுகைகளில் 3 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இப்பகுதி ஆற்றின் அகலத்தில் நான்கில் ஒரு பங்காக இருக்கலாம்

* குவாரிகளை கண்காணிக்க சுரங்கத்துறை போக்குவரத்து துறை வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய பணிக் குழுக்கள் அமைக்க வேண்டும்

* திருட்டு மணல் குவாரிகள் கடத்தல் லாரிகளை கண்டுபிடிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-202007:30:22 IST Report Abuse
தமிழ் விதிகள் மக்களுக்கு மட்டுமே பொருந்தும் அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது.
Rate this:
Share this comment
Cancel
shoba -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-202003:40:36 IST Report Abuse
shoba hahahahh hahaha haaahaha
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X