சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (23)
Advertisement
TNPSC,group4,exam,IAS,குரூப்4,தேர்வு,முறைகேடு

சென்னை: குரூப்-4 தேர்வில் சிவகங்கை அருகே பெரியகண்ணனுாரை சேர்ந்த திருவராஜ் முதலிடம் பெற்றார். இவர் பல முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர். திருவராஜ் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் விசாரித்தனர். கிராமத்தினரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் போலீசாக உள்ளார். அதிகாரிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டது. அப்போது முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மோசடியில் ஏஜன்டாக செயல்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி மூளையாக செயல்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ்காரரின் உறவினர்கள் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முதல் 50 இடத்திற்குள் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். அப்போதிருந்தே குரூப் 2, 4 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. இவ்வாறு கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
29-ஜன-202017:15:54 IST Report Abuse
Tamil படிப்பறிவு இல்லாத மந்திரிக்கு MLA விற்கு எதுவும் தெரியாது திருட்டு வேலை அரசியல்வாதிக்கு சொல்லிக்கொடுப்பதே பல IAS IPS தான். ஒருத்தன் ஒருத்தனும் அவன் சொந்தக்காரன் எத்தினை பேரை அரசு பணியில் நுழைத்து உள்ளனர் என்பது சோதித்து பார்த்தாலே தெரியும். போலீஸ் துறையில் பல போஸ்டிங் தகுதி அடிப்படையில் தேர்ந்து எடுப்பது குறைவு. குடும்பம் குடுமபம அரசு வேலைவாய்ப்புகளில் நுழைவது அரசு ஊழியர்கள் ias மற்றும் காவல் துறை சொந்தங்கள் என்ற பேச்சு பல வருடங்களாக உள்ளது. பெயரளவுக்கு தேர்வு அடுத்து திருட்டு தில்லுமுல்லு வேலை தான். அரசியல்வாதிகள் செய்யும் திருட்டு வேலைகளுக்கு இவர்கள் தயவு தேவை அதனால் ஒன்றும் நடக்காது. சிறிது நாட்கள் கழித்து இது மறந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
govind - kish Island,ஈரான்
29-ஜன-202015:33:51 IST Report Abuse
govind தமிழ் நாடு தேர்வாணையத்தில் ஊழல் என்பது முன்பிருந்தே திட்டமிட்ட வகையில் நடந்து கொண்டிருக்கிறது . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இன்ஜினியரிங் தேர்வுகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான ஊழல் ஏறத்தாழ அம்பது சதவீதம் மேற்பட்டவர்கள் சரியான வழியில் தேர்வாகவில்லை . நேர்முக தேர்வு முடிந்தவுடன் எதோ நேர்மையாக முடிவுகள் வெளியிடுவதாக தேர்வாணையத்தில் வெளியிடுவார்கள் சில ஆட்களுக்கு மதிப்பெண் ஏதும் குறிப்பிட மாட்டார்கள் " வித் ஹெல்ட" என்று குறிப்பிடுவார்கள் . அவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மதிப்பெண் குறித்து யாரும் அறிய முடியாது . சிறுது காலம் கழித்து அந்த "வித் ஹெல்ட "லிஸ்டில் இருந்து நிறைய பேர் தேர்வு ஆகியிருப்பார்கள் . இப்போதுதான் குறைந்தது ஒரு வருடத்தில் அறிவிப்பு ,தேர்வு , நேர்காணல் மற்றும் பணி ஆணை வழங்கப்படுகிறது. முன்பு தேர்வு அறிவிப்பு செய்து ஒரு வருடம் கழித்து தேர்வு ரிசல்ட் குறைந்தது இரண்டு வருடம் கழித்து செய்வார்கள் ஆகவே இன்ஜினியரிங் பிரிவு மாணவர்கள் இதை பெரும்பாலோர் எதிர்பார்க்கமாட்டார்கள் .இதுவே அவர்களுக்கு Tnpsc க்கு வசதியை போய்விடும்.இப்போது பதவியில் உள்ள பாதிக்கும் மேலோர் 2010 வரை தேர்வானவர்கள் "வித் ஹெல்ட " லிஸ்டில் உள்ளவர்கள் .அவர்களுடைய மதிப்பெண்கள் , எந்த சாதி ( பிசி . MBC என ) அறியமுடியாது. இது மாதிரியான ஊழல் தினமலர் பேப்பரில் 2000 வருடம் januvry மாதமே வெளியிட்டது. இப்போதும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் முன்பு மாதிரி 50 % ஊழல் இல்லை. 1980 டு 2010 வரை வித் ஹெல்ட முறையால் தேர்வானவர்கள் மிகுதி. தேர்வாணையம் காலம் கடத்துவதால் இந்த மாதிரி ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கிறது TNPSC ninaithaal 10 naalil முடிக்கலாம் . நிறைய நல்ல என்ஜினீர்ஸ் அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளில் நல்ல படியாக சம்பாதிக்கிறார்கள் இந்த மாதிரி ஊழல் நம் நாட்டில் உள்ளதால் . பணம் கொடுத்தோர் 2 அல்லது 3 வருடங்கள் வெயிட் செய்து போஸ்டிங் பெற்றுக்கொள்வோர். எழுத்த்து தேர்வு வரை ஓரளவு மெரிட் இருக்கிறமாதிரி தெரியும். தினமலருக்கு எனது நன்றி இந்த ஊழலை 20 வருடங்கள் முன்பே தெரிவித்தமைக்கு.
Rate this:
Share this comment
Cancel
M. SAROJA - Madurai,இந்தியா
29-ஜன-202014:22:52 IST Report Abuse
M. SAROJA அரசு தேர்வுகளில் குளறுபடிகள் என்றாலே ஒரே தீர்வாக தேர்வை ரத்து செய்கிறோம் என்று கூறி தப்பித்துக் கொள்கிறார்கள். இது போன்றுதான் கால்நடை உதவியாளர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது எவ்வாறு சரி என்று தெரியவில்லை. முறைகேட்டில் ஈடுஎட்டவர்கள் தண்டிக்கப் படவேண்டும். அரசு வேலைகளில் உள்ளோர் தவறு செய்தால் சஸ்பெண்ட் செய்யக்கூடாது டிஸ்மிஸ் செய்ய வேண்டும். முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் மற்றம் அதற்கு துணை போனவர்களை கைது செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X