பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் 'ஆதார்' எண் இணைப்பு?

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Aadhaar,voter_ID,link,Aadhaar_card,ஆதார்,ஆதார்_அட்டை

சென்னை: வாக்காளர்கள் பெயருடன் 'ஆதார்' எண்களை இணைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடக்கிறது. வாக்காளர்களின் வசதிக்காக விடுமுறை நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு இரண்டு மாதங்கள் இப்பணி நடந்தது. எத்தனை முகாம் நடத்தினாலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.


latest tamil newsபெரும்பாலான வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது புதிய இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். அப்போது ஏற்கனவே பழைய இடத்தில் உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை. இதனால் ஒருவருடைய பெயர் பல இடங்களில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. புதிய மென்பொருள் உதவியுடன் புகைப்படங்களை ஒப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதை ஒரு தொகுதிக்குள் செய்ய முடிந்தது; மாநில அளவிலோ தேசிய அளவிலோ செய்ய முடியவில்லை.

அதேபோல எத்தனை முறை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயரை நீக்கினாலும் பலர் மீண்டும் பெயர் கொடுக்கும் சூழல் உள்ளது. இதனால் ௧௦௦ சதவீதம் முறைகேடில்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தால் தயாரிக்க இயலவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயருடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அவ்வாறு இணைக்கும் போது ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 2015ல் வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கியது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர்; நீதிமன்றம் தடை விதித்தது.

சமீபத்தில் நீதிமன்றம் தடையை விலக்கி உள்ளது. மத்திய சட்டத் துறையும் ஆதார் எண்களை பெற அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வாக்காளர் சுய சரிபார்ப்பு திட்டம் நடந்தபோது ஏராளமானோர் தாமாக முன்வந்து முகவரி சான்றாக தங்கள் ஆதார் அட்டையை சமர்பித்துள்ளனர். எனவே வாக்காளர்களின் ஆதார் எண்களை பெற்று அவற்றை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. விரைவில் இப்பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
29-ஜன-202014:28:24 IST Report Abuse
spr ஆதாருடன் எதனையும் இணைத்துவிட்டால் அது பாதுகாப்பானது போலிகள் தவிர்க்கப்படலாம் என்பதெல்லாம் சரியான அணுகுமுறையல்ல ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், இணையத்தில் ஆள் லைனில் அவரது கைரேகையை வைத்து, சரிபார்ப்பது ஒன்றே சரியான முறை ஆதார் (Photo copy) பிரதி ஒன்றை காட்டினாலோ எண்ணைக் குறிப்பிட்டாலோ அப்படியொருவர் இருக்கலாம் என்று உறுதியாகுமே தவிர, வாக்களிக்க வந்தவர் அவர்தான் என்பது உறுதியாகாது ஆதார் (Photo copy) பிரதியில் இருக்கும் முகம் கருப்பாக விவரம் சரியாகத் தெரியாமல் இருக்கும் சரிபார்ப்பவரும் தேர்தல் அதிகாரியும் அதனை கண்டும் காணாமல் இருக்க வாய்ப்புண்டு வெறும் எண்ணை மட்டும் சரிபார்த்துவிட்டு விட்டு விடுவார்கள் ஆனால் நமது மின்னணு தொலைத் தொடர்பு (அது அவ்வப்பொழுது தொலையும் (காணாமற் போகும்) தொடர்புதான்) கட்டமைப்பு இன்னமும் அந்த நிலைக்கு முன்னேறவில்லை. எனவே ஆதார் பிரதியைக் ஏதோனுமொரு வழியில் (நம்மவர்கள்தான் ஒரு ஆயிரம் ருபாய் கொடுத்தால் அனைத்தையுமே அரசியல்வியாதிகளுக்குத் தானம் செய்து விடுவார்களே) கைப்பற்றுபவர், யார் வேண்டுமானாலும் எவருக்காகவும் வாக்களிக்கலாம். கள்ள வாக்கு தவிர்க்கப்பட வாய்ப்பில்லை மற்றபடி அதே பழைய கதைதான் நான் வாக்களிக்கவில்லை எனக்கு பதில் எவரோ வாக்களித்துவிட்டார் என்பது தொடரும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை போல இதுவும் ஒரு அரைகுறை முயற்சியாகவே முடியும் ஆதார் இன்னமும் ஒரு நம்பிக்கையான மாற்று ஏற்பாடாக அமையவில்லை என்பது ஒரு மனம் வருத்தம் தரும் செய்தியே
Rate this:
Cancel
29-ஜன-202013:06:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பல பேர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள் , அது கள்ளஓட்டுபோடுவதற்கு தான் வழிவகுக்கிறது. இந்த திட்டம் மூலம் அதை நீக்கலாம்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
29-ஜன-202011:37:38 IST Report Abuse
Rengaraj வாக்காளர் உரிமை, வாக்குரிமை , தனி மனித உரிமை இவையெல்லாம் பறிபோகிறது என்ற போர்வையில் கட்சிகள் நீதிமன்றம் சென்ற காரணத்தால் இந்த வேலை தள்ளி போனது. நூறு சதவீத வாக்களிப்பு என்று பூர்த்தியாகிறதோ அன்று தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X