கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.2002 முதல் 2005 வரையிலான வருமான வரி மதிப்பீடு தொடர்பாக நடிகர் ரஜினிக்கு 66 லட்சம் ரூபாய் வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதை எதிர்த்து ரஜினி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது; இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரி மேல்முறையீட்டு
Rajini,Rajinikanth,highcourt,ரஜினி,ரஜினிகாந்த்,வழக்கு,வாபஸ்

சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2002 முதல் 2005 வரையிலான வருமான வரி மதிப்பீடு தொடர்பாக நடிகர் ரஜினிக்கு 66 லட்சம் ரூபாய் வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதை எதிர்த்து ரஜினி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது; இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ரஜினி மனு தாக்கல் செய்தார்.

எந்தவித ஆதாரமும், விசாரணை ஏதும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறி வருமான வரித்துறை உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரி ஆணையர் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil newsவருமான வரித்துறை சார்பில் வழக்கறிஞர் சுவாமிநாதன் ''வருமான வரித்தொகை 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என மத்திய நேரடி வரி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்தே 1 கோடி ரூபாய்க்கு குறைவாக வருவதால் வழக்கை வாபஸ் பெறுகிறோம்'' என்றார். இதையடுத்து வருமான வரித்துறை வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்து ரஜினிக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
30-ஜன-202010:56:21 IST Report Abuse
ganapathy முதலில் அபராதம் விதிக்க படுகிறது. அதை எதிர்த்து வருமான வரி துறையில் மேல் முதலீடு ரஜினி செய்ய அது தள்ளு படி செய்ய படுகிறது. அதை எதிர்த்து வருமானவரி துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (incometax appeallate tribunal) ரஜினி மேல் குறியீடு செய்கிறார். அங்கு போதிய சான்று இல்லாமல் உரிய முறையில் விசாரணை நடத்தாமல் அபராதம் வித்திக்க பட்டு உள்ளது என்று தீர்ப்பாயம் ரஜினிக்கு ஆதரவாய் தீர்ப்பு வழங்கு கிறது. அதை எதிர்த்து வருமான வரி துறை மேல் முறையீடு செய்யஅந்த வழக்கு விசாரணைக்கு வரும் பொது... CBDT central board of Direct TAXES கொடுத்த கைடு லைன் படி ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான தொகை DISPUTED TAX ஆகா இருந்தால் மேல் குறியீடு செய்ய வேண்டாம் (யாராக இருந்தாலும் ) என்பதன் படி வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கின்றனர். இது ரஜினி அடைந்த வெற்றி ... நீங்களோ நானோ வழக்கு தொடுத்தாலும் இப்படி தான் தீர்ப்பு கொடுக்க முடியும். ( i am chartered accountant...) nandri...
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவை., தூத்துக்குடி மாவட்டம்,இந்தியா
29-ஜன-202016:33:48 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா அப்படித்தான் தள்ளுபடி பண்ணுவோம்
Rate this:
Cancel
raskoolu - madurai,இந்தியா
29-ஜன-202016:27:48 IST Report Abuse
raskoolu இங்க பிஜேபி மற்றும் ரஜினியை எதிர்த்து கூவுறவனுகளுக்கு, 66 லட்சம் ரஜினிக்கு ஒரு மேட்டாரே கிடையாதுனு யோசிக்கிக்குற அளவுக்காவது அறிவு இருக்கும்னு நம்புவோமாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X