பொது செய்தி

இந்தியா

ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும் என, தெரிகிறது.






உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, நவ.,9ல் தீர்ப்பு அளித்தது. 'இந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம். அதற்கான வழிமுறைகளை வகுக்க ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும், அயோத்தியில் வேறொரு இடத்தில், மசூதி கட்டுவதற்காக, சன்னி வக்பு வாரியத்துக்கு, ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.





இந்த அறக்கட்டளையை அமைக்க, மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இந்தப் பணியில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.





'அறக்கட்டளை அமைப்பது தொடர்பாகவும், மசூதி அமைக்க நிலம் ஒதுக்குவது தொடர்பான திட்டமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, ஒரு வாரத்துக்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்' என, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
29-ஜன-202013:33:53 IST Report Abuse
Ravichandran ராமனின் ஒழுக்க நெறிகள் பரவ கூடாது என்பதுதான் தேச துரோகிகளின் ஒரே நோக்கம், சரித்திர காலத்தில் இருந்து அயோத்தி ராமனின் இடம் அங்கே அந்த தெய்வத்திற்கு மிக பிரமாண்ட கோவில் அமைய வேண்டும், அயோத்தியும் ராமேஸ்வரமும் ஹிந்துக்கள் வாழ்நாளில் ஒருமுறை கட்டாயம் தரிசிக்க வேண்டிய இடமாகும் அதுவே ஒரு கட்டளையாக மாறவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
29-ஜன-202013:15:56 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
29-ஜன-202011:26:05 IST Report Abuse
prakashc இது இந்து மதத்தின் ஒற்றுமைக்கு அடையாளம். மற்ற மதத்தினர் அஞ்ச வேண்டாம். கூடஇருந்து கழுத்தறுப்பது, தினமும் 5murai கூவுதல் , அங்கேங்கேய பாம் வெட்சி விளையாடுதல் , போன்ற அசிங்கம் இல்லாமல் அமைதியான இந்து மதம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X