பாக்.,கில் ஹிந்து கோயில் இடிப்பு: 4 சிறுவர்கள் கைது

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (23)
Advertisement
Pakistan,Hindu_temple,attacked,arrest,பாகிஸ்தான், ஹிந்து, கோவில், கோயில், இடிப்பு, கைது

கராச்சி: பாகிஸ்தானில் ஹிந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாதா தேவல் பிட்டானி கோயிலை விஷமிகள் சிலர் சமீபத்தில் இடித்தனர். அங்குள்ள கடவுள் சிலைகளையும் அவர்கள் அவமதித்தனர். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தினர். இந்நிலையில் கோயிலை இடித்ததாக 15 - 12 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





இதுகுறித்து சிந்து மாகாண சிறுபான்மை விவகார அமைச்சர் ஹரி ராம் கிஷோரி லால் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் கடவுள்களை அவமதித்தது தொடர்பான பிரிவில் வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒற்றுமையாக இருக்கும் சமூகத்தில் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு கோயிலை இடித்துள்ளனர். போலீசார் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
29-ஜன-202016:44:02 IST Report Abuse
M.COM.N.K.K. கோவிலை இடித்தவர்கள் பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாதிகளின் கைவரிசை தான் சிறுவர்களால் தான் இடிக்கப்பட்டது என்று பொய்ப்பிரச்சாரம் செய்துவிட்டால் உலகநாடுகளை எளிதாக நம்பவைத்து தப்பித்துக்கொள்ளலாம். பலே ஐடியா
Rate this:
Share this comment
Cancel
ana -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-202014:29:04 IST Report Abuse
ana அப்ப 90வயதில் இடித்தால் பரவயில்லை யா
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
29-ஜன-202014:18:17 IST Report Abuse
kumzi மூனு வயசுலேயே கையில் கொடுத்து பயங்கரவாதியா ஆக்கிடுறானுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X