'தேர்தல் வாக்குறுதியை ராகுல் நிறைவேற்றவில்லை'

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (17)
Advertisement
Congress,Rahul,RahulGandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி

மும்பை: 'மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, 500 சதுர அடி வீடு கட்டித்தரப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அளித்த தேர்தல் வாக்குறுதி, சரிவர நடைமுறைபடுத்தப்படவில்லை' என, அக்கட்சியின் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா கவலை தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மும்பை குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, 500 சதுர அடியில், வீடு கட்டித்தரப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வாக்குறுதி அளித்தார். தேர்தல் வெற்றிக்குப் பின், கூட்டணி கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இத்திட்டம் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி, சரிவர நிறைவேற்றப்படவில்லை என, அக்கட்சியின் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.





காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, அவர் எழுதிய கடிததத்தில் கூறியிருப்பதாவது: மும்பையில், குடிசை பகுதி மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ், தற்போது, 269 சதுர அடி வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. 500 சதுர அடி வீடுகள் கட்டித்தரப்படும் என, ராகுல் வாக்குறுதி அளித்தார்.அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படாதது கவலை அளிக்கிறது. மேலும், பல தேர்தல் வாக்குறுதிகளையும், காங்கிரஸ் அளித்துள்ளது. அவற்றை சரிவர நிறைவேற்ற, வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
30-ஜன-202009:14:40 IST Report Abuse
konanki வாக்குறுதி லலாம் சும்மா அழற கொழந்த க்கு கிலுகிலுப்பை காட்டன் மாரி அத்த போய் பேசிக்கினு
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
29-ஜன-202017:41:02 IST Report Abuse
konanki தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் டமாஸ் பாஸ்.எங்க தீயசக்தி உங்க ஊழல் பார்ட்னர் ரூபாய்க்கு 3 படி அரிசி ன்னு பொய் சொல்லிச்சு. அடைந்தால் திராவிட நாடு ன்னு டுபாக்கூர் டயலாக் உட்டது. இப்ப நாங்க ஜெயிச்சா எல்லாருக்கும் 12000 ஆயிரம் தருவோம் ன்னு அண்ட புளுகு சொல்லிச்சு. அவங்க புள்ளைய இளைஞர் அணி தலைவர் ஆக்குவோம் ன்னு வாக்குறுதி சொல்லவில்லை. ஆனால் ஆக்குனார்.
Rate this:
Share this comment
Cancel
29-ஜன-202015:59:49 IST Report Abuse
ஆப்பு வாக்குறுதிகளை நிறைவேத்தியிருந்தால் இன்னிக்கி 15 லட்சம் நம்ம கணக்கில் இருக்கும் இல்லைன்னா கணிசம் 150 லட்சம் கோடி ரூவா கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும். இதுவரை 12 கோடி பேருக்கு வேலை கிடைச்சிருக்கும். தமிழிசை கேட்ட மாதிரி குடுத்த வாக்குறுதியெல்லாம் நிறை வேத்திட முடியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X