டில்லியில் அனல் பறக்கும் பிரசாரம்; பா.ஜ.,- ஆம் ஆத்மி - காங்., மோதல்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
DelhiElection2020,BJP,Congress,AamAadmi,AmitShah,Kejriwal,Sonia,PM,Modi,DelhiElection,டில்லி,தேர்தல்,பிரசாரம்,பாஜ,காங்கிரஸ்,ஆம்ஆத்மி

புதுடில்லி : டில்லியில் சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

டில்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்.8ல் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 11ம் தேதி துவங்கி அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 2015 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அதிரடியாக 67 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பா.ஜ. மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இம்முறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ. தேர்தல் வியூகத்தை அமைத்து விறுவிறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.


latest tamil news




அமித் ஷா தலைமையில்...


ஆங்காங்கே 'நாட்டை மாற்றிக் காட்டினோம்; இப்போது டில்லியை மாற்றுவோம்' என்றும் 'டில்லி மோடியுடன் கைகோர்த்துள்ளது' எனவும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மோடிக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை பிரசாரகராக உருவெடுத்துள்ளார். பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் என 11 கூட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளார். அவருடன் டில்லி மாநில பா.ஜ. தலைவர் மனோஜ் திவாரியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமித் ஷா தன் பேச்சில் குடியுரிமை திருத்த சட்டம் காஷ்மீரின் 370வது சட்டப் பிரிவு நீக்கம் முத்தலாக் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களை விவரிக்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் காங். தலைவர் ராகுல் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மை மக்களின் நலனை புறக்கணிப்பதாக அமித் ஷா குற்றம் சாட்டி வருகிறார்.

இத்தேர்தலில் பா.ஜ. 200 எம்.பி.க்களை களமிறக்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் மூன்று எம்.பி.க்களுக்கு பிரித்தளிக்கப்பட்டு பா.ஜ. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி நிலவரப்படி பா.ஜ. 343 பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் பிரதமர் மோடி பா.ஜ. தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் நிதின் கட்கரி உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். இதில் போஜ்புரி நடிகர்கள் ரவி கிஷன் தினேஷ் லால் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் வாயிலாக பூர்வாஞ்சல் வாக்காளர்களை கவர திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news




சளைக்காத ஆம் ஆத்மி:


பா.ஜ.வுக்கு சற்றும் சளைக்காமல் ஆளும் ஆத் ஆத்மி கட்சியும் அனல் தெறிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சி ஐந்து ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்திய இலவச 'வை பை' மின்சாரம் குடிநீர் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்கிறது. டில்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி நாட்டிலேயே சிறந்த பள்ளிகளாக உயர்த்திய பெருமையை ஆம் ஆத்மி பறைசாற்றுகிறது. அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதிவு செய்த பேச்சுக்கள் மூலம் டில்லி மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள வசதியாக பிரத்யேக வலைதளத்தையும் ஆம் ஆத்மி துவக்கியுள்ளது.


latest tamil news




காங்.,கும்...


பா.ஜ. - ஆம் ஆத்மி தீவிரமாக மோதி வரும் நிலையில் காங்கிரசும் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை களமிறக்கி தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவதில் முனைப்புடன் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rathinakumar KN - Madurai,இந்தியா
29-ஜன-202019:22:15 IST Report Abuse
Rathinakumar KN பனி காலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம். நல்லா இதமா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-ஜன-202015:49:42 IST Report Abuse
Endrum Indian இந்த தேர்தல் முடிந்தவுடன் அன்டோனியோ மேனியோ எனது உடல் நிலைக்காக அமெரிக்க செல்கின்றேன், மகன் பப்பு தி கிரேட் லண்டன் செல்கின்றேன் என்று சொல்லி அவர்கள் இருவரும் தத்தம் வங்கிகளில் உள்ள ரூ 92 லட்சம் கோடி என்னவாயிற்று என்று ஒரு நோட்டம் விட்டு வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
29-ஜன-202015:09:46 IST Report Abuse
Vijay D Ratnam டெல்லியை இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக கைப்பற்றும். வழக்கம்போல இஸ்லாமிய, கிருஸ்தவ வாக்குகள் கால் சதவிகிதம்கூட கிடைக்காது. ஆனால் சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக பிஜேபி நிச்சயம் வரும். காங்கிரஸ் சீன்லயே இல்லை. கடந்த முறை போல இப்பவும் வாஷ் அவுட்டானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை, அல்லது இரண்டு மூன்று தொகுதிகள் கிடைக்கலாம். சென்றமுறை அண்ணாஹசாரே விடமிருந்து அரசியலுக்கு க்ளீன் இமேஜோடு வந்த கெஜ்ரிவாலுக்கு இப்போது அந்த இமேஜ் காலி. ஆம் ஆத்மீக்கு மெஜாரிட்டிக்கு வாய்ப்பில்லை. அதிகபட்சம் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் கெஜ்ரிவாலை இன்னொரு குமாரசாமி, உத்தவ்தாக்ரே ஆக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X