பொது செய்தி

தமிழ்நாடு

'சீனாவில் இந்தியர்களுக்கு உதவ தயார்': தமிழக அரசுக்கு இந்திய தூதரக அதிகாரி கடிதம்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (8)
Advertisement
china, India, TNgovernment,  chronovirus,  சீனா, இந்தியர், தமிழகஅரசு, தூதரகஅதிகாரி, கடிதம், கொரோனாவைரஸ்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்திய துாதரகம் தயாராக உள்ளது' என, சீனாவில் உள்ள இந்திய துாதரகத்தின், துணை தலைமை அதிகாரி அயூக்னோ விமல், தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:சீனாவில் பரவி வரும், 'கொரோனா' வைரஸ் தாக்கம் குறித்து, 24ம் தேதி கடிதம் எழுதியிருந்தீர்கள். இங்குள்ள சுகாதார நிலை குறித்து, இந்திய அரசு தொடர்ந்து, உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனா அரசும், சூழ்நிலையை நன்றாக ஆராய்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நகரை விட்டு வெளியேற விடாமல், தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் கிடைப்பதை, சீனா அரசு உறுதி செய்துள்ளது. கிருமி தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் பரப்பப்படுகின்றன.பாதிப்பு ஏற்பட்டால், உடனே அவர்கள் செல்ல வேண்டிய, பிரத்யேக மருத்துவமனைகள் குறித்த தகவல்களும், விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹூபய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களை, இந்திய துாதரக அதிகாரிகள் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.

இந்திய துாதரக அதிகாரிகளை, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள, +8618 61208 3629, +8618 61208 3617 என்ற, இரண்டு ஹாட்லைன் போன் எண்களை உருவாக்கி உள்ளோம். இது தவிர, 'வீசாட்' என்ற இணையதள குழுவை உருவாக்கி, அதில், ஹுபயில் வசிக்கும் இந்தியர்களை இணைத்து, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் வசதியையும், ஏற்படுத்தி இருக்கிறோம். பல்கலைகளில் படிக்கும், இந்திய மாணவர்களுக்கு, உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா என, பல்கலை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகளுடன், இந்திய துாதரகம் தொடர்ந்து பேசி வருகிறது. சீனாவில் நிலவும் கடுமையான சூழ்நிலை கருதி, பீஜிங்கில் உள்ள, சீனா அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுடனும், ஹுபய், மாகாண அரசு அதிகாரிகளுடனும் பேசி, நிலைமையை கண்காணித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க, இந்திய துாதரகம் தயாராக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
29-ஜன-202015:05:08 IST Report Abuse
dandy நாங்கள் சீனாவிலும் ஜாதி பார்ப்போம்...எங்கள்கு எல்லாம் தனியாக செய்து தர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
29-ஜன-202012:44:42 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா சீனா வுல தான் அதுக்கு பேர் கொரோனா வைரஸ் ஆனா தமிழகத்தில் அதுக்கு பேர் "திமுக".
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
29-ஜன-202010:30:06 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா நீங்க தாண்டா பாம்புக்கு பால் வாா்த்து அத கும்புடுறிங்க... சைனா போன்ற நாடுகள்ல அத சுட்டு திங்கிறான்டான்னு நக்கலடிச்சிங்களேடா.... இப்ப அவனுகளுக்கு தான்டா பால் ஊத்தியிருக்கு மொத்தமா
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
29-ஜன-202019:59:17 IST Report Abuse
Sanny மிக மோசமான நிலையில் ஒரு ஆட்கொல்லி வைரஸ் உருவாகி இருக்கு, இன்னும் பலமடங்கு பலத்துடன் உலகம் முழுக்க மோதுவத்துக்கு தயாராகிவருது, இதுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்க,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X