பொது செய்தி

தமிழ்நாடு

38 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை?

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (12)
Advertisement
farmer, pM, primeminister, fund, பிரதமரின்உதவித்தொகை, விவசாயிகள்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: பிரதமரின் உதவித்தொகையை, 38 லட்சம் விவசாயிகளுக்கு பெற்று தருவதற்கான நடவடிக்கையை, வேளாண் துறை துவங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உதவித்தொகை திட்டத்தை, மத்திய அரசு, 2019 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும். சாகுபடி காலங்களில் இந்த நிதி, மூன்று தவணையாக, தலா, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், இந்த திட்டத்தில், 36.7 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 34.4 லட்சம் பேருக்கு, 2019ல், உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, 2,431 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. நடப்பாண்டிற்கான, முதல் தவணை நிதியை விடுவிக்கும் பணியை, மத்திய அரசு துவங்கியுள்ளது.அடுத்த மாதம், இரண்டாவது வாரத்திற்குள், இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.




சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, தேசிய வங்கிக்கு, இந்த பணம் மொத்தமாக, மத்திய அரசிடம் இருந்து வந்து சேர்கிறது. அங்கிருந்து, மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. தமிழகத்தில், 2019ல் பதிவு செய்த விவசாயிகளை விட கூடுதலாக, 1.55 லட்சம் பேர், நடப்பாண்டில் பதிவு செய்துள்ளனர். அதன்படி, 38.25 லட்சம் விவசாயிகளுக்கு, முதல் தவணை நிதியை பெற்று தருவதற்கான முயற்சிகளை, வேளாண் துறை துவங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
03-பிப்-202017:48:01 IST Report Abuse
Jaya Ram இந்தப்பக்கம் 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,80 லட்சம் கோடி கொடுத்து பிச்சைக்காரனாக்கிவிட்டு மறுபக்கம் கடன் தள்ளுபடியாக வெறும் நூறு பேருக்கு 2.00 லட்சம் கோடி தள்ளுபடி செய்து அவர்களை வாழவைக்கும் அரசுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
29-ஜன-202020:41:21 IST Report Abuse
Krishna Bribery & Corruption for Votes.Instead of Freebies & Concession (except to VVV Poor), Widen Tax-Net, Avoid Multiple-Looting Taxations, Give- Jobs to People (Only On Minm Wages Only One Per family), Development-Infrastructures & Services-Industries-Commerce With VVVHuge Money Saved by Abolishing All VVVHuge Wasteful Expenditures From Peoples Money (All PayScales & Perks of All Govt Officials-AntiPeople-Useless-Not So Required Posts, Freebies-Concessions Eats Away Majority of Budget .
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
29-ஜன-202017:36:21 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பிரேக்கிங் செய்தி இதை எல்லாம் போட மாட்டான் ஊடகம் . தேச விரோத அந்நிய நாட்டு சம்பத்தப்பட்ட தன் கல்லாப்பெட்டி நிரம்ப தேவையான செய்தி முட்டும்தான் போடுவான் பொருக்கி ஊடகங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X