கேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (46)
Advertisement
caa, assembly, arifkhan, Governor,kerala, ஆளுநர், கவர்னர், கேரளா, கவர்னர், முகமதுஆரிப்குான், குடியுரிமைசட்டம், எம்எல்ஏ, அமளி, போராட்டம்,

திருவனந்தபுரம்: சட்டசபையில் இடம்பெறும் தனது உரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகத்தை படிக்க மாட்டேன் என கேரள கவனர்னர் ஆரிப் கான் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைக்கு வந்த அவரை உள்ளே விடாமல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர். இதனையடுத்து கவர்னரை, பாதுகாவலர்கள் உதவியுடன், முதல்வர் விஜயன் பாதுகாப்பாக அழைத்து சென்றார்.






மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. மாநில அரசு தனக்கு தெரியாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்த கவர்னர், தன்னிடம் தகவல் தெரிவிக்காததற்கு அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக மாநில அரசிடமும் அறிக்கை கோரியிருந்தார்.




இந்நிலையில், இன்று(ஜன.,29) துவங்கும் இந்த ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத்தில் இடம்பெறும் கவர்னர் உரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் குறித்த பகுதியை படிக்க மாட்டேன் என கவர்னர் ஆரிப் கான் தெரிவித்திருந்தார்.




இந்நிலையில், சட்டசபை தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆரிப்கானை, வாசல் வந்து முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார். பின்னர் உள்ளே அழைத்து சென்றார். அப்போது, கவர்னரை வழிமறித்த ஐக்கிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை படிக்க மாட்டேன் எனக்கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ''கோ பேக்'' என கோஷமிட்டனர். பின்னர் கவர்னரை அவை காவலர்கள் பாதுகாப்புடன் முதல்வர் பினராயி விஜயன் இருக்கைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து, சட்டசபைக்குள் பதாகைகளை ஏந்தி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் செய்தனர். பின்னர், கவர்னர், உரையை வாசிக்க துவங்கியவுடன் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர் கவர்னர், தனது உரையை வாசிக்க துவங்கினார். அப்போது, கேரள அரசி்ன் நோக்கம், முதல்வர்பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று , குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோஷத்தை கவர்னர் ஆரிப்கான் வாசித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
29-ஜன-202019:25:53 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை, ஆலோசனைகளை ஏற்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றால் ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த தமிழ் நாடு அமைச்சரவையின் தீர்மானம் பற்றி ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன ?
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
29-ஜன-202017:38:45 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பினராயியின் சவுண்டுக்கு பயப்படாமல் தங்கள் சேவை தொடரட்டும் . தேச விரோத எம் எல் ஏய்க்கள் நிறைந்த மாநிலம் இந்த மலையாள மக்குகள்
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
29-ஜன-202016:06:53 IST Report Abuse
adithyan கேரளா கம்மிகள் சண்டை மூட்டிவிட்டு குளிர்காயப்பார்த்தார்கள். நடக்கவில்லை.அதனால் ஆர்ப்பாட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X