பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (42)
Advertisement
பரனூர், சுங்கச்சாவடி, போலீஸ், வீடியோ,

இந்த செய்தியை கேட்க

சென்னை:பரனுார் சுங்கச்சாவடி தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவை வெளியிட, சுங்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம், தயக்கம் காட்டி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுார் சுங்கச்சாவடியை கடந்து, தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பஸ் டிரைவருக்கும், இம்மாதம், 25ம் தேதி அதிகாலை, கட்டண வசூல் தொடர்பாக, பிரச்னை எழுந்தது. சுங்கச்சாவடி ஊழியர்கள், பஸ் டிரைவரை தாக்கியுள்ளனர். அதற்கு, பஸ் பயணியர் பதிலடி கொடுத்ததில், சுங்கச்சாவடி மொத்தமாக சூறையாடப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.இதனால், நான்கு நாட்களாக சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பு நடக்கவில்லை.சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு, தினமும், 40 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தன்று சுங்கச்சாவடியில், 18 லட்சம் ரூபாய் மாயமாகியுள்ளது தெரிய வந்துள்ளது.




வன்முறையை கட்டுப்படுத்த, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசார் கூறத் துவங்கி உள்ளனர்.இவ்வாறு, பல்வேறு தகவல்கள், அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. சுங்கச்சாவடியில், 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துஉள்ளது. சம்பவத்தன்று நடந்த வீடியோ பதிவுகளை வெளியிட்டால், 18 லட்சம் ரூபாய் கொள்ளை போனது, துப்பாக்கி சூடு நடந்தது உண்மையா என்பது அம்பலமாகி விடும்.ஆனால், வீடியோ பதிவுகளை வெளியிட, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், சுங்க கட்டணம் வசூலிப்பு நிறுவனமும் தயக்கம் காட்டி வருகின்றன.

வீடியோ பதிவுகளை, போலீசார் கைப்பற்றி எடுத்து சென்று விட்டதாக, சுங்க கட்டண வசூலிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பரனுார் சுங்கச்சாவடி வன்முறையில், பல்வேறு சந்தேகங்கள், பதில் கிடைக்காமல் நீடிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
03-பிப்-202015:40:46 IST Report Abuse
dandy எல்லா புகழும் கட்டுமர கட்சிக்கே
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
29-ஜன-202020:58:28 IST Report Abuse
oce தேசிய நெடுஞ்சாலைகள் பொது சொத்து. அதில் தனியாரை ஒப்பந்த அடிப்படையில் சுங்க வரி வசூலிக்க அனுமதிப்பது வீண் வம்பு தனமான வேலை. அதற்கு பதில் அரசே அதனை நேரடி பொறுப்பேற்று நிர்வகிக்கலாம். ஒப்பந்த தாரர்களிடம் சாலையை ஒப்படைக்க கூடாது.
Rate this:
Share this comment
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
30-ஜன-202010:42:09 IST Report Abuse
R MURALIDHARANமுதலாவதாக அரசிடம் நிதி இல்லை. அரசு நிர்வகித்தால் அது சரிப்பட்டு வராது. அரசு ஊழியர்களின் மனப்பான்மைதான் தெரியுமே. நீண்ட வரிசை நிற்கும்...
Rate this:
Share this comment
Cancel
binakam - chennai,இந்தியா
29-ஜன-202020:45:06 IST Report Abuse
binakam வருஷ வருஷம் மத்திய அரசு பற்றாக்குறை பட்ஜெட் னு ஒன்னு போடுது தெரியுமில்லே. தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் அரசுக்கு பல ஆயிரம் கோடி நிலுவை வைத்துள்ளது. விஷயம் புரியாம பேசக்கூடாது சிறுபயபுள்ளே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X