அரசியல் செய்தி

தமிழ்நாடு

நானும் ஒரு தீவிரவாதி: சீமான்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (124)
Advertisement
seeman, terrorist, சீமான், நாம்தமிழர், தீவிரவாதி, பழனிபாபா

இந்த செய்தியை கேட்க

மதுரை: கருத்தை, கொள்கையை மக்களிடத்தில் தீவிரமாக கொண்டு சேர்ப்பதால், நானும் ஒரு தீவிரவாதி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பழனிபாபா நினைவேந்தல் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று(ஜன.,28) நடந்தது.

இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுகிறது. ரஜினி நடித்த அத்தனை படங்களும் வன்முறை படங்கள். ஆனால், வன்முறை எதற்கும் தீர்வாகாது என ரஜினி புத்தி சொல்கிறார். துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என சொல்லும் ரஜினி, மண்சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு தர துக்ளக் வாங்கி கொடுக்கட்டும். தூத்துக்குடி போராட்ட களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பேசிய ரஜினி, குடியுரிமை சட்டம் குறித்து கேட்டால் பதில் இல்லை.தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க மக்கள் கருத்து தேவையில்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் அவர்தான். காங்கிரஸ் ஆட்சியின் போது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்ட போது திமுக ஆதரவு தெரிவித்தது. பா.ஜ.,வுக்கு எதிரானது திமுக என இன்னும் மக்கள் நம்பி கொண்டுள்ளனர். எச்.ராஜாவை வெற்றி பெற வைத்தவர்கள் திமுகவினர்.




பழனிபாபாவை, தீவிரவாதி என சொல்லக்கூடாது. அவரை தீவிரவாதி என ஏற்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ரெண்டிற்கும் வெவ்வெறு பொருள். வெவ்வேறு சொற்கள். ஒன்றாக கருதக்கூடாது.பழனிபாபா, ஒரு தீவரவாதி என்றால், சீமானும் தீவிரவாதிதான். ஏனென்றால், நாங்கள் எங்கள் கருத்தை கொள்கையை தீவிரமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்போம். பழனிபாபாவை கருத்தால், வீழ்த்தி இருந்தால், அது தீவிரவாதம். ஆனால், கருத்தால், வெல்ல முடியாமல், கத்தியால் வெட்டி வீழ்த்திய செயல்தான் பயங்கரவாத செயல். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜன-202015:16:59 IST Report Abuse
skv srinivasankrishnaveni வடிவேலுவையா அவமானம் செய்றான் நானும் ரௌடிதான் என்று கூத்துக்காட்டுவாரு வடிவேலு அதுபோல நீ தீவிரவியாதி உன்னைப்பிடிச்சு திஹார்லேதான் வைப்பானுக அப்பத்தேரியும் பலன் எப்படினு தெரியனுமா கேளுயா பசிதம்பரத்தியும் அவருபிள்ளையையும்
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-ஜன-202010:26:31 IST Report Abuse
Matt P ivaru பெரிய சிந்தனையாளரு . பெரிய பெரிய கருத்தேல்லாம் இவரு மூளையில் தான் உதிக்கும் போலிருக்கு. மக்கள் சிந்திக்க தெரிந்தவர்கள். உங்க மாதிரி ஆளுங்க பேச்சை கேட்டு தான் அவங்க வாழ்க்கையை முன்னேத்தனும் என்று ஒன்றும் இல்லையே. அரசியல்வாதிகள் எல்லாம் அடுத்தவன் பணத்தை சுரண்டுவதில் தானே தீவிரமனாக இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
30-ஜன-202004:45:59 IST Report Abuse
 nicolethomson பாவம் கைப்புள்ள , அட நம்ம வாசகரை சொல்லலீங்க , இந்த நானும் நானும் என்று அலைகிறானே வெயில் முத்திப்போச்சோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X