முகேஷ் சிங்கின் மனு தள்ளுபடி : தூக்கு உறுதியானது

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்த முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று (ஜன.,29) தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் பிப்.,1 ம் தேதி அவன் தூக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது.latest tamil news
2012 ம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக குற்றவாளிகள் தரப்பில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும், கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முகேஷ் சிங் என்பவன் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தான். இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அவனது தூக்கு உறுதியாகி உள்ளது.


latest tamil news


தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் கூறுகையில், அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு, பரிசீலனை செய்த பிறகே ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்துள்ளார். இதனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மற்றொரு குற்றவாளியான அக்ஷய் தாகூர், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று (ஜன.,28) மாலை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். தொடர்ந்து இவன், ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், மற்றொரு குற்றவாளியான வினய் ஷர்மா சார்பில் அவரது வழக்கறிஞர், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என, ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பியுள்ளார். குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி மனுக்கள் தாக்கல் செய்து வருவதால், திட்டமிட்டபடி பிப்.,1 ம் தேதி காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


latest tamil newsஇவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளுக்காக சிறை நிர்வாகம் சுமார் ரூ.50,000 வரை செலவிட்டுள்ளது. இவர்களின் இந்த மனுக்கள் ,தண்டனை நிறைவேற்றுவதை எந்த விதத்திலும் பாதிக்காது என சிறை நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-ஜன-202020:58:55 IST Report Abuse
Rajagopal இன்னும் இரண்டு நாட்களில் தருமம் வெல்லும். சத்தியம் நிலைக்கும். நியாயம் உயிர் பெறும்.
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
29-ஜன-202018:05:20 IST Report Abuse
Rohin இவுனுங்க திரும்ப திரும்ப மனு போடறத பாத்தா நம்ம பா சி செட்டியார் தான் நினைவுக்கு வர்றார், அவர் தான் திரும்ப திரும்ப இப்படி மனு போட்டுக்கிட்டே இருந்தார், இந்த பா சி ய பாத்து இந்த அயோக்யனுங்களு கத்துக்கிட்டாங்களோ
Rate this:
Share this comment
Cancel
bala - chennai,இந்தியா
29-ஜன-202015:32:55 IST Report Abuse
bala Dont hang instead encounter all the criminals or give slow poison in food or handover to the public they will take care...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X