வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடலுார்: 'குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு பா.ஜ., தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலுார் மாவட்டத்தில் நடந்த, குடியுரிமை திருத்த சட்ட விளக்கக் கூட்டத்தில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா பேசியதாவது:குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் துளியளவு கூடப் பாதிப்பு ஏற்படாது. இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி, தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட, யாருக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.

தேவையற்ற, மக்களுக்கு அவசியமற்ற போராட்டத்தை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.