வுஹானில் உணவு, தண்ணீருக்கு பற்றாக்குறை

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (2)
Advertisement
Food, Water, Indian_Student,China, coronavirus, fmjaishankar, jaishankar, airindia, உணவு, குடிநீர், கொரோனாவைரஸ், ஜெய்சங்கர், இந்தியா, சீனா,

இந்த செய்தியை கேட்க

வுஹான்: கொரோனா வைரசின் மையப்புள்ளியாக விளங்கும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள பல்கலையில் படிக்கும் 8 இந்திய மாணவர்கள், உணவு மற்றும் குடிநீர் விரைவில் தீரும் நிலையில் உள்ளதால், தங்களை விரைவில் மீட்கும்படி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பலி அதிகரிப்பு


சீனாவில், 'கொரோனா வைரஸ்' வேகமாக பரவி வருகிறது. சீனாவுக்கு சென்று திரும்பிய பலருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. சீனாவிற்கு சென்று திரும்பியவர்களுக்கு இந்தியாவில் உள்ள 7 விமான நிறுவனங்களில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் சோதனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 5,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.


தவிக்கும் இந்தியர்கள்


கொரோனா வைஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரில் பல இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அந்த நகரில் இருந்து வெளியே செல்லவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகளில், சீனாவில் உள்ள இந்திய தூதரகம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.


8 மாணவர்கள்


வுஹான் பல்கலையில் 8 இந்திய மாணவர்கள் தங்கியுள்ளனர். சீன அரசின் தடை காரணமாக அவர்களால், அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அங்கு உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக தவித்து வருவதாகவும், அங்கிருந்து விரைவில் தங்களை மீட்கும்படி இந்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாணவர்கள் அசாம், டில்லி, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


முடங்கிய நகரம்


அந்த பல்கலையில் படிக்கும் அசாமை சேர்ந்த கவுரவ்நாத் (22) கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உள்ளேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பல்கலை வளாகத்தில் சிக்கியுள்ளோம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க தினசரி 2 மணி நேரம் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், பல சிக்கல்களை சந்திக்கிறோம். அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவும், குடிதண்ணீரும் விரைவில் தீர்ந்துவிடும். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால், விரைவில், எங்களை மீட்க வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


அனுமதி


வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர போயிங் 747 விமானத்தை இயக்க ஏர் இந்தியாவிற்கு , மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.


உறுதி


இந்தியர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரிகள், சீன அரசுடன் தொடர்பில் உள்ளனர். விமானத்தை அனுப்பி வுஹான் நகரில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனு நீதி - Chennai,இந்தியா
29-ஜன-202014:34:38 IST Report Abuse
மனு நீதி உண்மையில் மனிதாபிமானதுக்கு தான் அந்த நாட்டில் பிரச்சனை. Bio Weapons சோதனை முயற்சியின் விளைவு தான் இது. சீனாவில் வைரஸ் இந்தியாவில் சில பிரிவினைவாதி மனிதர்கள்.
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
29-ஜன-202013:28:17 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா தோழர், நம்ம சைனால.. கேள்விப்பட்டேன் தோழரே. இந்தியால இந்த மேட்டரை திசை திருப்பனும், தோழரே.... ஒரு ஐடியா இருக்கு. இந்த வருஷம் வர இருக்கற புது ஐபோன்ஸை, இந்த வைரஸ் பிரச்சினையால சைனால செய்ய முடியாது, மேக் இன் இந்தியால பண்ணலாமான்னு ஆப்பிள் யோசிச்சிட்டு இருக்காங்களாம். இப்படி நடக்கனும்ன்னு, மோடி தான் அந்த வைரஸை சைனால பரப்பினார்ன்னு நம்ம நியூஸ் போடுவோம்.... மக்கள் நம்புவாங்களா?.. சிஏஏவால இந்தியக் குடிமகன்ஸ்க்கு ஆபத்துன்னு சொன்னப்ப நம்பினவங்க தான, இதயும் நம்புவாங்க நம்புவாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X