உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தலையில் மண்ணை போட்டுக்கொண்ட சீனா

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (46)
Advertisement
கொரோனா வைரஸ்,வைரஸ், மறு உருவாக்கம்,உயிரிஆயுதம்,
சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா

பீஜிங்: சீனாவில் உள்ள வுஹானில், பயோ-வெப்பன் (உயிரி ஆயுதங்கள்) தயாரிக்க உயிர்க்கொல்லி வைரஸ்களை கண்டறியும் ஆய்வுக் கூடத்தை சீனா அரசு நிறுவியது. உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி சீனா அமைத்த இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ஆபத்தான வைரஸ்கள் பரவலாம் என அமெரிக்கா உள்பட உலக ஏற்கனவே எச்சரித்த தகவல் தெரிய வந்துள்ளது.


அமெரிக்கா எச்சரிக்கை


அமெரிக்க மேரிலாந்து உயிரி பாதுகாப்பு ஆலோசகர் டிம் ட்ரெவன், 'சீனாவின் கலாச்சாரம், இந்த ஆய்வைப் பாதுகாப்பற்றதாக மாற்றக் கூடும். இங்கிருந்து கிருமிகள் வெளியேறி கடும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும்' என, 2017ம் ஆண்டே எச்சரித்திருந்தார்.இதை மெய்ப்பிக்கும் வகையில், 'சார்ஸ்' மற்றும் 'எபோலோ' என்ற வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து பல முறை வெளியேறி, பாதிப்பை ஏற்படுத்தியதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இருந்த போதும், சீன அரசு, இந்த ஆய்வகத்தை மூடவோ, உயிரி ஆயுதங்களை கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிடவோ இல்லை.இந்நிலையில், சீனாவின் வுஹான் நகரை, 'கரோனா வைரஸ்' தாக்கியது. அங்கிருந்து சீனாவின் பிற நகரங்களுக்கும், பிற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.






இஸ்ரேலின் சந்தேகம்



இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம், 'சீனாவின் பயோ--வெப்பன் தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் கரோனா வைரஸ் பரவியிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன்' எனக் கூறியிருந்தார்.டேனி ஷோஹமின் கருத்து வெளியான சமயத்தில், வுஹான் நகரில் உள்ள வனவிலங்கு விற்பனைச் சந்தையில் இருந்து தான், கொரோனா வைரஸ் பரவியதாகக் சீன அரசு கூறியது. இதையடுத்து அந்த சந்தை மூடப்பட்டது.தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால், 132 பேர் இறந்துள்ளனர்; 4,500க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.


ஆய்வில் திருப்புமுனை!


சீனாவின் சுகாதாரத் துறை, கரோனா வைரசின் 'மைக்ரோஸ்கோபிக்' படத்தை, நேற்று முன்தினம் முதன்முதலாக வெளியிட்டது.




இந்த நிலையில், ஆஸ்திரேலியவின் மெல்பர்ன் நகரில் உள்ள சிறப்பு ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கரோனா வைரசின் மறு உருவாக்கத்தை (First To Replicate) கண்டறிந்துள்ளனர். விரைவில் அதை, உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பால், கரோனா வைரசைக் கண்டறிவதும், அதற்குச் சிகிச்சை தருவதும் எளிமையாகும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தக் கண்டுபிடிப்பால், இந்த வைரசுக்கான தடுப்பு மருந்தைக் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.





இதனால், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இருந்தும், மேற்குலக நாடுகளின் கண்டுபிடிப்புகளை சீனா ஏற்றுக் கொள்ளுமான என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
01-பிப்-202017:28:37 IST Report Abuse
Sundar Self destruction.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
01-பிப்-202005:26:28 IST Report Abuse
meenakshisundaram சீனாக்காரன் என்னிக்குமே சொன்னதை கேட்கமாட்டான் ,காஷ்மீர் விஷயத்திலும் திபெத் விஷயத்திலும் இப்போ /கோறானோ விலுமே
Rate this:
Share this comment
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
31-ஜன-202005:01:13 IST Report Abuse
Muraleedharan.M கெடுவான் கேடு நினைப்பான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X