நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020
Advertisement

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து நியூசி., அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது.





இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணியில் டிக்னெர் நீக்கப்பட்டு, ஸ்காட் குக்கெலிஜின் சேர்க்கப்பட்டார்.இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.




பென்னெட்டின் 2வது ஓவரில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார் ரோகித். இந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. ரோகித் (23 பந்து) அரைசதம் எட்டினார். ராகுல் 29 ரன் எடுத்தார். ரோகித் 65 ரன்னுக்கு அவுட்டாக, அடுத்த இரண்டாவது பந்தில் துபேயும் (3) கிளம்பினார்.





ஸ்ரேயாஸ் (17), கோஹ்லி (38) சற்று உதவினர். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (10), மணிஷ் பாண்டே (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X