பொது செய்தி

இந்தியா

கருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Abortion, GovernmentApprove, 24Weeks, UnionMinister, PrakashJavadekar, கருக்கலைப்பு, மத்தியஅரசு, ஒப்புதல், மசோதா, அமைச்சர், பிரகாஷ்ஜவடேகர்

புதுடில்லி: கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1971ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் படி, 20 வாரங்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலஅளவை 26 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பாதுகாவலனாக அரசு செயல்படுகிறது. கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் குழந்தை, வளர்ச்சியை நிலையை எட்டிய பின்னர், தாய்க்கும் சிசுவுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது மத்திய அரசின் கடமை என குறிப்பிடப்பட்டிருந்தது.




இந்நிலையில் கருக்கலைப்புக்கான காலஅளவில் மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 24 வாரங்களாக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது, என்றார். இதன்மூலம் அடுத்த வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202016:11:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆறுமாத கருவை கலைப்பது அபத்தம் . அதனால் தாய்க்கும் ஆபத்து ஏற்படலாம். வேண்டாத கருவை கலைக்க எதற்காக ஆறுமாதம் காத்திருக்க வேண்டும் , 8 மாதத்தில் முழு குழந்தை உருவாகிவிடும். விதிவிலக்கான சில வழக்குகளில் நீதிமன்ற வழிகாட்டுதலில் மருத்துவ குழு ஆராய்ந்து முடிவெடுக்கலாம் , ஆனால் பொது மக்களுக்கு அனுமதி கொடுப்பது சரியல்ல
Rate this:
Share this comment
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜன-202013:37:57 IST Report Abuse
Ramesh R மாட்டிற்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி
Rate this:
Share this comment
Cancel
Flair Vision - Mumbai,இந்தியா
30-ஜன-202010:28:37 IST Report Abuse
Flair Vision ஒரு சிறு படத்தில் திருமணத்துக்கு முன்பு செய்த தவறினால் குழந்தை உருவாகிவிடும் , அதை கலைக்க மருத்துவமனைக்கு செல்லும் அந்த ஜோடி. அந்த பெண் ஆணிடம் போராடுவாள் கலைக்க வேண்டாம் திருமணம் செய்யலாம் என்று, அவன் இப்போது வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்திருக்கிறது உன்னை இப்போது திருமணம் செய்ய முடியாது , திரும்ப வந்து தான் என்று பிடிவாதமாக இருப்பான். அவள் கலைக்க சென்று விடுவாள் உள்ளே . வெளில அமர்ந்து இருக்கும் பெரியவர் கூறுவார் அந்த ஆணிடம் , அங்கு அமர்ந்திருக்கும் மற்றொரு ஜோடி 11 வருடமாக குழந்தை செல்வம் பெற காத்திருப்பதாக, அப்போது அந்த ஆணின் குழந்தை ஒரு பாலிதீன் மூட்டையில் தூக்கி கொண்டு பொய் இருப்பார்கள். எனக்கு இரண்டு நாள் மனஉளைச்சல் அந்த பாலிதீன் மூட்டை பார்த்ததில் . அது ஒரு மாத குழந்தை , இப்போது இவர்கள் அனுமதி அளிப்பது 5 மாத குழந்தை. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X