ஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020
Advertisement

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஏமாற்றிய ஸ்பெயினின் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.







ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் ரபெல் நடால், 5வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர்.

நான்கு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் தியம் 7-6, 7-6, 4-6, 7-6 என வெற்றி பெற்றார். இத்தோல்வியின்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெடரருடன் (20) பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நடால் (19) கோட்டைவிட்டார்.






மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். இதில் வாவ்ரின்கா 6-1, 3-6, 4-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், எஸ்தோனியாவின் அனெட் கோன்டாவீட் மோதினர். இதில் ஹாலெப் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா 7-5, 6-3 என, ரஷ்யாவின் அனஸ்டாசியா பவுலிசென்கோவாவை தோற்கடித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X