பொது செய்தி

இந்தியா

உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு முதலிடம்

Added : ஜன 29, 2020 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி: உலகத்திலேயே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களில் பெங்களூரூ முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.






லொகேஷன் டெக்னாலஜி கம்பெனியான டாம் டாம் (டாம்2), உலகம் முழுவதும் போக்குவரத்து நெருக்கடியான நகரங்கள் குறித்து ஆய்வை நடத்தியது. இதற்காக 57 நாடுகளில் உள்ள 416 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவுகள்: இந்தியா நகரங்களான பெங்களூரூ முதலிடத்திலும், மும்பை நகரம் 4வது இடத்திலும், புனே 5வது இடத்திலும் , தலைநகர் டில்லி 8வது இடத்திலும் உள்ளன. மேலும் பிலிப்பைன்சின் மணிலா, கொலம்பியாவின் பகோடா, ரஷ்யாவின் மாஸ்கோ, பெருவின் லிமா,துருக்கியின் இஸ்தான்புல், இந்தோனேஷியாவின் ஜகர்த்தா ஆகிய நகரங்களும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.





மேலும், பெங்களூரு மக்கள் ஒரு ஆண்டிற்கு 243 மணிநேரங்களை போக்குவரத்து நெருக்கடியில் கழிக்கின்றனர். அதாவது, 10 நாட்கள் 3 மணிநேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றனர்.அதேபோல், மும்பை மக்கள், 209 மணி நேரங்களும், புனே நகரத்தினர் 193 மணிநேரங்களும், டில்லி மக்கள் 190 மணிநேரங்களும் இழக்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
30-ஜன-202012:29:24 IST Report Abuse
Pannadai Pandian பெங்களூரு தொழில் வளர்ச்சியில் சென்னையை தாண்டி சென்று விட்டது. அதற்கு காரணம் பல மக்கள் வாழும் இடமாக சென்னை இருந்ததில்லை. தமிழ் தேசியம், தமிழன் என்ற குறுகிய வட்டம், இந்தியை உள்ளே விடாதது, திமுகவின் லஞ்ச லாவண்யம் என்று அடுக்கி கொண்டே போகலாம்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
30-ஜன-202011:26:48 IST Report Abuse
ரத்தினம் நல்ல வேளை ப்பா , மெட்ராஸ் இந்த பட்டியலில் இல்லை. .
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
30-ஜன-202010:54:01 IST Report Abuse
 Sri,India அப்ப நம்ம சிங்கார சென்னை?? அதிலும் மத்திய அரசு சென்னையை ஒதுக்கி விட்டதால் நாளை முதல் குருமா மற்றும் வீரம் இல்லாத மணி தலைமையில் பலூன் விடும் போராட்டம் நடத்த திட்டம் போடுவார்கள் ....கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ரூ . இருநூறு மற்றும் பிரியாணி சாப்பாடு கட்டாயம் உண்டு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X