பொது செய்தி

இந்தியா

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் துவங்க திட்டம்?

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (8)
Advertisement

கோல்கட்டா: இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டம் வரும் 2022 ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டாவின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஹவுரா பாலம் அமைந்துள்ள ஹூக்ளி நதியின் நீருக்கடியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் நாட்டின் முதலாவது நீருக்கடியில் செல்லும் மெட்ரோ பாதை என்ற பெருமையை பெறும்.





இது குறித்து கோல்கட்டா மெட்ரோ ரயில் வாரியத்தின் இயக்குனர் மானஸ் சர்க்கார் கூறியதாவது: ரயில்வே வாரியத்திடம் இருந்து ரூ.20 கோடி அளவிற்கு நிதி உதவியை கோரியுள்ளோம். மேலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது நகர மக்கள் தொகையில் 20 சதவீதம் அளவிற்கு அதாவது 9 லட்சம் மக்கள் இந்த ரயில் பாதையை பயன்படுத்துவர். ஹூக்ளி ஆற்றை படகில் கடக்க 20 நிமிடத்திற்கு மேல் ஆகும் நிலையில் இந்த மெட்ரோ ரயில், ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தையை எடுத்து கொள்ளும்.

கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டம், 2021ல் முழுமையடையும். வரும் 2035ம் ஆண்டு இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பாதையை 10 லட்சம் பேர் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இத்திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் கடந்த 2019ல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "நீருக்கடியில் ரயில் ஒரு சிறந்த பொறியியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு" என ஒரு வீடியோவை வெளியிட்டு, இந்த ரயில், நாட்டின் முன்னேற்றத்திற்கான அடையாளமாகும் எனவும், இதன் மூலம்,நாடு பெருமிதம் கொள்ளும் எனவும் பதிவிட்டிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baygonspray - Aryan,ஈரான்
30-ஜன-202003:24:51 IST Report Abuse
baygonspray England டு பிரான்ஸ் 31 km நீளம் கடலுக்கு அடியில் ட்ரெயின் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதை உள்ளது . இந்தியாவில் சிலை கூட சீனாவில் இருந்து வருகிறது , மெட்ரோ ரயில் போட்டுவுது முழுக்க சீனா கம்பெனி தான் . மத்தவன் உழைப்பில் பெருமை தேடுவதே இவனுங்க வேலை .
Rate this:
Share this comment
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
29-ஜன-202023:01:09 IST Report Abuse
CHINTHATHIRAI Most of the IAS, IPS and IFS are Engineers only
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜன-202022:07:38 IST Report Abuse
Vena Suna அருமை..ஆனால் ஒழுங்காக கட்ட வில்லை என்றால் ஜல சமாதி தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X