பொது செய்தி

இந்தியா

பஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு அபராதம்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (9)
Advertisement
Bus, LadiesSeat, Fine, Odisha, ஒடிசா, பஸ், பேருந்து, பெண்கள், இருக்கை, ஆண்கள், அபராதம்

புவனேஸ்வர்: நகர பஸ்களில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி நடக்கிறது.தலைநகர் புவனேஸ்வரில், போலீஸ் கமிஷனர் தலைமையில், நகர பஸ் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பஸ்களில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது. அவர்கள், ஆண்களின் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக கூறப்பட்டது.




இதையடுத்து, பஸ்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் ஆண்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், பஸ்களில் தொல்லை தரும் ஆண்கள் பற்றி புகார் செய்ய, பெண்களுக்கு என தனி தொலைபேசி எண் தரவும் முடிவு செய்யப்பட்டது என, புவனேஸ்வர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
30-ஜன-202013:00:54 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao இன்னொரு முக்கியமான விஷயத்தை யாரும் கவனிப்பதில்லை. பஸ் முன் படிக்கட்டு ஏறியதும் வலது பக்கம் முதல் சீட் " முதியோர், உடல் உனமுற்றோருக்கு" என்று ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் இதில் பெண்கள்தான் அமர்ந்திருக்கிறார்கள். முதியோர், ஊனமுற்றோர் என யார் வந்தாலும் இடம் தருவதில்லை. இவர்கள் மேலும் நடவடிக்கை பாய வேண்டும்..
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31-ஜன-202021:07:56 IST Report Abuse
 nicolethomsonஉண்மைதான் இந்த கருத்தையும் வலியுறுத்தி எழுதவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
30-ஜன-202011:09:04 IST Report Abuse
 Sri,India ஆண்கள் அமரும் சீட்டின் கிழே "திருடர்கள் ஜாக்கிரதை " என்ற வாசகம் போடுவது ஏன்??
Rate this:
Share this comment
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
30-ஜன-202009:47:23 IST Report Abuse
Ganesh G பெண்கள் ஆண்களின் இருக்கைகளில் அமர்ந்தால்? கணவன் மனைவி சேர்ந்து ஒரே பக்கமாக உள்ள பின்பக்க இருக்கைகளில் அமர்ந்தால்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X