சபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர்

Updated : ஜன 29, 2020 | Added : ஜன 29, 2020 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபர்மதி ஆற்றை காண வருகிறார் என குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார்.






வருகிற பிப்.,8-ம் தேதி டில்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி டில்லி சென்றுள்ளார்.
டில்லின் வடக்கு பகுதியான சாஸ்திரி நகரில் பிரசாரத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் பிப்., மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அவரது இந்திய பயணத்தின் போது குஜராத் மாநிலத்திற்கும் வருகை தருகிறார்.




பிரதமர் மோடியின் முயற்சியால் சபர்மதி ஆறு தூய்மையானதாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் சபர்மதி ஆற்றை பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தனர். இவர்களை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் அங்கு வர உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இருப்பினும் அமெரிக்க அதிபர் வருகையின் தேதியை அவர் உறுதிப்பட கூறவில்லை.

டிரம்பின் இந்திய பயணம் குறித்து இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிரம்பின் இந்திய பயணம் வரும் பிப்.,24 முதல் 26 ம் தேதி வரை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சென்ற ஆண்டு (2019) குடியரசு தினத்திற்கு டிரம்பிற்கு, இந்தியா சார்பில் அழைப்பு விடுத்தும், சில காரணங்களால் அவரால் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
30-ஜன-202013:17:14 IST Report Abuse
Ravichandran சூப்பர் சூப்பர், ஆமா இங்கேயொருத்தர் சிங்காரச்சென்னைய மாத்தி சிங்கப்பூர் ஆஸ்திரேலியா அமெரிக்க போன்ற நாடுகளில் சுத்துப்பயணம் போய் கூவம் நதியை அழகு படுத்தி போட் விட்டு பூ செடிகள் வளர்ந்து அழகு சென்னையா மாத்தி வச்சுருக்காரே பார்க வரமாடீங்களா ட்ரம் ஜி, அவரு மேயராயிருந்தபோ பண்ணுன அழகான கூவம் நதியோரம் ஒக்காந்து நீக்க டைனிங்கே சாப்பிடலாம், வாங்க வாங்க,
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-202004:06:58 IST Report Abuse
J.V. Iyer மோடிஜியில் உழைப்பால் உயர்ந்தது குஜராத். அவரின் உழைப்பால் உயருகிறது, ஒளிர்கிறது இந்தியா.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
29-ஜன-202023:46:00 IST Report Abuse
Nallavan Nallavan இவரது வருகைக்கு, 2020 திசம்பரில் அமெரிக்க செனட் / அதிபர் தேர்தல் வரவிருப்பதும் ஒரு காரணமாக இருக்கும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X