பாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., குற்றச்சாட்டு

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 30, 2020 | கருத்துகள் (30)
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்வகையில் இந்திய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்' என அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறியுள்ளது.






டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மாணவர் படையினரின் நிகழ்ச்சியில்பங்கேற்ற பிரதமர் மோடி 'இந்திய ராணுவத்திற்கு பாகிஸ்தானை வீழ்த்த அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது -10 நாட்கள் மட்டுமே தேவைப்படும்' என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாக். வெளியுறவுத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பிரதமரின் பேச்சினை பாகிஸ்தான் மீதான பா.ஜ. அரசின் ஆவேசம் நிறைந்த கருத்தாக பார்க்கிறோம். பா.ஜ. அரசின் கொள்கைகள் மீதான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவதற்கான நடவடிக்கையாகவே இதை கருதுகிறோம்.





எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் முறியடிக்க பாகிஸ்தான் மக்கள் மற்றும் ராணுவத்தினர் தயாராக உள்ளனர்; அவர்களை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது.பாகிஸ்தானின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்தியதலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்; இதனை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.





தெற்காசியாவின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜம்மு - -காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202015:59:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கவலைப்படாதீங்க இம்ரான், ஆசிய துணை கண்டத்தின் அமைதிக்கு எந்த பங்கமும் வராது, நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய நாடு இல்லை, சத்தமில்லாமல் முடித்துவிடுவார்கள் எங்கள் ராணுவ வீரர்கள். இனிமேல் POK என்று ஒன்று இருக்காது. நீ தொடர்ந்து காஷ்மீர் காஷ்மீர் என்று கத்திகொண்டே இருக்க வேண்டியது தான்
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
30-ஜன-202015:20:52 IST Report Abuse
Sampathkumar Sampath உங்களையெல்லாம் வச்சு செய்யணும் .....
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
30-ஜன-202014:13:49 IST Report Abuse
JSS பாதுகாப்பை அச்சுறுத்துவது இந்தியாவின் பேச்சு அல்ல. உங்களின் பயங்கரவாதமும் தீவிரவாதமும் தான் தென் கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. உங்களாலும் மறுக்கமுடியாது உங்கள் பெரிய அண்ணன் சீனாவாலும் மறுக்கமுடியாது. உலகமே உங்களை தள்ளி வைத்து இருக்கிறது என்பதை அறியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X