போபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 30, 2020 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி : போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு, பிப்ரவரி, 11ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.






மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984, டிசம்பரில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'யூனியன் கார்பைட்' நிறுவன தொழிற்சாலையில், விஷ வாயு கசிவு ஏற்பட்டது.


1 லட்சம் பேர் பாதிப்பு


அந்த சம்பவத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்; மேலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, யூனியன் கார்பைட் நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக, 1989ல், 715 கோடி ரூபாயை வழங்கியது. தற்போது, அந்த நிறுவனத்தை, 'டோவ் கெமிக்கல்ஸ்' என்ற அமெரிக்க நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இன்று வரை அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.





இதனால், அந்நிறுவனம் கூடுதல் இழப்பீடாக, 7,844 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், மத்திய அரசும் நேற்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி உச்சநீதிமன்ற அமா்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போபால் விஷ வாயு கசிவில் சிக்கி பாதிக்கப்பட்டவா்களுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்காமல் இருந்து வருகிறது. அவா்கள் நீண்ட காலமாக சட்டரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் உச்சநீதிமன்றத்தில் விபத்துக்கு காரணமான நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரிடம் இருந்து ரூ.7,844 கோடி கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.






நீதிபதி விலகல்


விஷவாயு வழக்கு தொடர்பான அந்த அமர்வில் இருந்த நீதிபதி ரவீந்திர பட், விசாரணையில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு தரப்பில், வழக்கறிஞராக இருந்து வாதாடியதால், தன்னால் இந்த அமர்வில் இடம்பெற முடியாது என, அவர் தெரிவித்தார். இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான, அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேறு சில நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பிப்ரவரி, 11ம் தேதி, இந்த வழக்கை விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202013:07:30 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren This is another big betrayal of Scam Congress, Karma will not leave this family..
Rate this:
Share this comment
Cancel
30-ஜன-202011:50:26 IST Report Abuse
தமிழ் இந்த வழக்கை கோர்ட் கைவிட்டுவிடுவதே நல்லது. சம்பவம் நடந்து எவ்வளவு வருடங்கள் ஆகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் இறந்துபோயிருப்பர். இந்த கேஸ் ஐ இழுத்து மூடிவிட்டு மற்ற கேஸ்களை யாவது சீக்கிரமாக பைசல் செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
30-ஜன-202011:10:54 IST Report Abuse
Nallavan Nallavan விஷவாயு செலுத்தி மரணங்களை உறுதி செய்து, ஒரு மூன்றாம் உலக நாட்டில் இது போன்ற தாக்குதல்கள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவுக்கு தகவல் சொன்ன, அமெரிக்க ஆண்டர்சனை பத்திரமாக அமெரிக்கா அனுப்பி வைத்த காங்கிரஸ் அப்போதைய அரசுக்கு நன்றி .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X