லண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிகரிப்பு

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 30, 2020 | கருத்துகள் (5)
Advertisement
London_University,Indian_students,London,University,Indian,students,லண்டன்,பல்கலை,  இந்தியமாணவர்கள், அதிகரிப்பு

லண்டன் : லண்டன் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 34.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உயர்க்கல்வி புள்ளியியல் நிறுவனம் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: லண்டன் பல்கலைக்கழகங்களில் 2018 - 2019ம் ஆண்டில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 35 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர் என கண்டறியப்பட்டது. இது 2017 - 2018 ஆண்டு இருந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட 5.8 சதவீதம் அதிகமாகும்.லண்டனில் உள்ள பல்கலை.களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 34.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.





அதிக மாணவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 25 ஆயிரத்து 650 மாணவர்களுடன் சீனா முதல் இடத்தையும் 7460 மாணவர்கள் அதிகரித்து அமெரிக்கா இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துள்ளன. நான்காம் இடத்தில் இருந்த இந்தியா 7158 மாணவர்கள் அதிகரித்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு படிப்பு முடிந்த பின் வேலை தேட வசதியாக இரண்டு ஆண்டு காலத்திற்கு விசா வழங்கப்படும் என்ற அரசின் முடிவால் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.MURALITHARAN - Doha,கத்தார்
30-ஜன-202016:25:54 IST Report Abuse
Dr.MURALITHARAN இதற்கு முந்திய காலகட்டத்தில் படிப்பு முடித்ததும் வெளியேறவேண்டும் என்ற சட்டத்தால் பாதிக்க பட்ட மாணவர்கள் நிலை என்ன. கோமாளி ராஜ்யம் , கும்மாளம் இதுதான் இங்கிலாந்து
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
30-ஜன-202016:10:12 IST Report Abuse
dandy பிரிட்டன் வாழ் வெள்ளை தாத்தா ..பாட்டிகளுக்கு ..மணமகள் ..மணமகன் ...தயார் ...
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-ஜன-202008:46:29 IST Report Abuse
elakkumanan ஆமாம் , அதிகரிக்கத்தான் செய்யும்... எங்க ஊரில்தான், பல்கலைக் கழகங்களுக்குள், கழிவு நீரோடை புகுந்து, துப்பாக்கி, குண்டு, அருவாள், உருட்டு கட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு, முகத்தை மூடிக்கிட்டு, இலவச சலுகையை வாங்கிகிட்டு, பொய்யான ஆதாரங்களை கொடுத்து, இப்பிடி படிப்போட லெவல் வேற நிலைமைக்கு போயாச்சு...சும்மா, பழைய பெருச்சாளி மாதிரி, வெறுமனே படிச்சு, ஒரு டிகிரி வாங்கி... யாருக்கு வோனும் ஒங்க செர்டிபிகேட்.. காலேஜில் படிச்சு (படிப்பை தவிர எல்லா கருமங்களையும் ) ஒரு அஞ்சு ஆறு போலீஸ் கேஸ், ஒன்னு ரெண்டு கொலை கேசு, முடிஞ்சா, தேசத்தை காட்டிக்கொடுத்த கேசு....இப்பிடி, எங்க ஊரு படிப்பு எல்லாமே வாழ்க்கை கல்வி....எல்லாமே செய்முறைதான்,...சும்மா கிளாஸுக்குள்ள ஒக்காந்து, வாத்திஸ் வந்து ஆத்து ஆத்துன்னு ஆத்தி.. சுத்த போர்...உரிமைக்கு போராடனும் சார்...நாட்டை காட்டிக்கொடுக்கும் உரிமைக்கு போராடனும்.. சும்மா padippu மட்டும் போதாது...எங்க ஊரு கல்வி இப்பிடி ....எப்புடி............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X