இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 30, 2020 | கருத்துகள் (24)
Advertisement

டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார்.


சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்திய பொருளாதாரம் குறித்து கூறியதாவது: இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையிலுள்ளது. அந்நாட்டின் நுகர்வும் அதிகரித்து வருகிறது. இந்தியா மிகப் பெரிய நாடு; அது வளர்ந்து வருகிறது. அதன் மக்கள் தொகையில், இள வயதினர் அதிகம் உள்ளனர். கல்வி மேலும் மேம்பட்டு வருகிறது; நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர்.

சேவை பொருளாதாரத்துக்கான திறன்களும், திறமையும் இந்தியர்களிடம் உள்ளன. நான்காவது தொழில் துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது.இந்தியாவில் உள்ள எங்கள் குழுவினர், மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வணிகத்தை மிகவும் திறம்பட நிர்வகித்து வருகின்றனர்.மேலும், உலக பொருளாதாரம் குறித்தும் நாங்கள் சிறப்பாக உணர்கிறோம். இப்போது, மெதுவான வளர்ச்சி சூழல் உள்ளது.

எங்களது ஆராய்ச்சி குழுவின் கணிப்புப்படி, வரும் ஆண்டில், உலக பொருளாதாரம், 3.2 சதவீதமாக அதிகரிக்கும். அமெரிக்காவின் பொருளாதாரம், 1.7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-202015:56:33 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இது எங்களுக்கும் தெரியும் , இதை அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சொல்லுவோம் , இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது , வேலை செய்யாமலேயே வீட்டிற்கு 20 ஆயிரம் சம்பளம் கொடுப்போம் , நீங்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு வாழலாம் , எங்களுக்கு ஓட்டுமட்டும் போட்டுவிடவேண்டும் - பப்பு , பப்பி
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
30-ஜன-202013:20:52 IST Report Abuse
Ravichandran தொப்பிகள் கடன் பிரபுக்களுக்கு இட்டலி ரசிகர்கள் மற்றும் மோடி எதிரணியினர் இன்று விடுமுறை
Rate this:
Share this comment
Cancel
santha kumar - ruwi,ஓமன்
30-ஜன-202012:47:52 IST Report Abuse
santha kumar அதாவது இவர்கள் எதை வைத்து பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என்று சொல்கிறார் ? நானும் பொருளாதாரம் தான் படித்தேன் , கடந்த 25 வருடமாக மேலாளராக உள்ளேன். இந்தியா மற்றும் உலக பொருளாதாரத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். மோடி, mms , ராகுல், யை விட்டு தள்ளுங்கள். அவர்கள் அரசியவாதிகள் , இந்திய பொருளாதாரத்தில் முன்னேறியது என்றால் எந்த புள்ளிவிபரத்தில், எந்த துறையில் முன்னேறியது. கடந்த நான்கு வருடத்தில் நாடு இந்த துறையில் மிக பலமாக வளர்ந்தது என்று சொல்ல எதாவது இருக்கிறதா?. நான் சில மாதங்கள் முன் பம்பாய் இல் recruitment க்கு சென்றேன். எனக்கு தேவை 3 என்ஜினீயர் மற்றும் 150 தொழிலாளிகள் . தொழிலாளிகள் சம்பளம் 140 ரியல் , என்ஜினீயர் க்கு 350 முதல் 700 ரியல். உண்மையை சொல்கிறேன் , நான் அதிர்ந்தது , என்ஜினீயர் 100 ரியல் சம்பளத்திற்கு அழுது அடம்பிடிக்கிறான் , எப்படியாவது வேலை கொடுங்கள் என்று. நாட்டில் வேலை வாய்ப்பு என்பது அறவே இல்லை என்றே சொல்லலாம். வேலை வாய்ப்பு இல்லை என்றால் அங்கு தொழில் முன்னேற்றம் இல்ல என்றே சொல்ல முடியும். இதற்கு பொருளாதாரத்தை பற்றி மேலோட்ட மாக தெரிந்தவர்களை அரசியல்வாதிகள் தற்பொழுது உலக பொருளாதார மந்தம், global economic crisis , என சொல்லி மடக்குவார்கள்.உண்மை, crisis இருந்தால் இந்த பிரச்சினை வரும். ஆனால் அதற்க்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது. ஒரு பிரச்சினை என்றால் அதற்கு காரணம் சொல்வதற்கு அரசு தேவை இல்லை. உலக crisis என்று சொல்ல யார்வேண்டுமானாலும் இன்டெர்நெட் இல் பார்த்தல் தெரியும். முன்னெச்சரிக்கையுடன் சரியாக கணித்து , திட்டமிடுபவர்தான் தலைவர் , திறமைசாலி. அதாவது உலக சந்தையில் அனைவரும் பொருளாதரத்தில் சதுரங்க போட்டிபோடுபவர்களே. இந்தியாவும் உலக சந்தையில் போட்டி போடும் ஒரு நாடுதான். அதில் யார் சரியாக காயை நகர்த்தி செல்கிறார்களோ அவர்தான் பிரச்சினை வரும் சமயத்தில் நிம்மதியாக இருக்கலாம் .இல்லை என்றால் அடுத்தவர் மேல் காரணம் சொல்லி தப்பிக்க பார்க்கலாம். எடுத்துக்காட்டாக , 2008 இல் மிக பெரிய crisis இருந்தது.mms என்ன செய்தார் என்பதை அதற்க்கு முன் அவரின் அணைத்து பட்ஜெட் சொல்லும்[ பொருளாதாரத்தை பற்றி புரிந்தவர் தான் சரியாக புரிய முடியும் ]. சாதாரணமாக பார்த்தல் ஏன் இவர் இப்படி செய்தார் என்று நினைத்து அவரை திட்டி தீர்க்கலாம் . crisis வந்த பிறகு தான் புரிந்தது அவர் ஏன் அப்படி செய்தார் என்று. அந்த சமயத்தில் USA மற்றும் துபாய் இல் பெரிய வங்கிகள் மூடியது இப்பொழுதும் நினைவில் உள்ளது. அந்த crisis இல் பத்து சதம் கூட இப்பொழுது இல்லை.
Rate this:
Share this comment
Suri - Chennai,இந்தியா
30-ஜன-202014:57:47 IST Report Abuse
Suriநூறுக்கு ஐநூறு சதவிகிதம் உண்மை. ஒரு குறைந்தபட்ச பொருளாதார அறிவு ஆற்றவர்களிடம், அரசியல் ஆதாயத்துக்காக ஒரு திறமையற்ற ஆளிடம் நிதி துறை கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு இந்த அரசு ஒரு சிறந்த உதாரணம்....
Rate this:
Share this comment
vadivel - coimbatore,இந்தியா
30-ஜன-202016:10:37 IST Report Abuse
vadivelஇந்தியா பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் இருந்து வேறுபாடும் ஒன்றாக நினைத்து கொண்டு ஒப்பீடு செய்ய வேண்டாம்....
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
31-ஜன-202009:42:32 IST Report Abuse
mohan1000 % உண்மை.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X