பசுமை செஸ் வரி வசூல்: ஜே.பி நட்டா குற்றச்சாட்டு

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 30, 2020 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : டில்லியில் காற்று மாசுவை கட்டுக்குள் கொண்டுவர மக்களிடம் வசூலிக்கப்பட்ட பசுமை செஸ் வரியை டில்லி அரசு தவறாக பயன்படுத்தியது என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.






டில்லியில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் அனில் கோயலை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி நட்டா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றவுடன் பல வாக்குறுதிகளை தந்தன. டில்லியில் மினரல் குடிநீருக்கு இணையான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களில் டில்லியில் தான் மோசமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் கூறியுள்ளது.





தொடர்ந்து, டில்லியில் புதியதாக 500 க்கும் அதிகமான பள்ளிகள் அமைக்கப்பட்டதாக கெஜ்ரிவால் கூறினார். ஆனால் துணைமுதல்வர் சிசோடியாவின் பட்பா்கஞ்ச் தொகுதியில், கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு புதிய பள்ளி கூட அமைக்கப்படவில்லை. டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இந்த காற்று மாசுபாட்டினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.





இந்நிலையில் டில்லியில் காற்று மாசுவைத் தடுக்க பசுமை செஸ் வரியை கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தினார். இதற்காக மக்களிடமிருந்து சுமார் 1200 கோடி வரையில் வசூலிக்கப்பட்டது. அதில் ரூ. 216 கோடியை விளம்பரத்திற்காக மட்டுமே செலவு செய்திருக்கிறார். இந்த வகையில் மக்களின் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காற்று தூய்மைப்படுத்தும் கோபுரங்கள் டில்லியில் அமைக்கப்படுவதாக கெஜ்ரிவால் அரசு கூறியது. ஆனால் இதுவரை அந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக, கிழக்கு டில்லி தொகுதி வேட்பாளா் கெளதம் கம்பீா் தனது எம்.பி. நிதியில், தனது தொகுதியில் இந்தக் கோபுரத்தை அமைத்துள்ளார் என்றார். இவ்வாறு நட்டா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
30-ஜன-202013:05:44 IST Report Abuse
cbonf டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சி மாறி பிஜேபி ஆட்சி அமைவது உறுதி. அகாலி தளமும் இப்போது பிஜேபிக்கு ஆதரவு தந்துள்ளது. பீஹாரிகளின் கட்சிகளான JDU மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் கட்சியும் டெல்லி பிஜேபிக்கு ஆதரவு தருகின்றன. பிஜேபி 70 ல் 40 -45 சீட்டுக்கள் பெற்று ஆட்சி அமைப்பது உறுதி
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
30-ஜன-202008:29:35 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         விபூதி பொட்டலம் வாயை திறந்திடுச்சி
Rate this:
Share this comment
30-ஜன-202011:29:06 IST Report Abuse
V Venkatachalam, Chennai 87ஏண்டா நீ முரசொலி அறிவுக் கொழுந்துன்னு பேர் வச்சுக்கிட்டா உனக்கு இன்னொரு தகுதி கிடைக்குமே. அதான் இந்த விபூதி பொட்டலம் மற்றும் குங்குமப் பொட்டலம் இரண்டையும் இன்னொருத்தன் ...அடிக்கலாமே. விபூதி பொட்டலம்ன்னா உனக்கு அவ்வளவு இளப்பமாடா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X