உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் நகரம் : பெங்களூரு "டாப்"

Added : ஜன 30, 2020 | |
Advertisement
புதுடில்லி : உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இது தவிர மும்பை, புனே, டில்லி ஆகிய 3 இந்திய நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.டாம் டாம் டிராபிக் இன்டக்ஸ் என்ற அமைப்பு உலகின் 57 நாடுகளின் 416 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. இந்த பட்டியலில் டாப் 10

புதுடில்லி : உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இது தவிர மும்பை, புனே, டில்லி ஆகிய 3 இந்திய நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.



latest tamil news


டாம் டாம் டிராபிக் இன்டக்ஸ் என்ற அமைப்பு உலகின் 57 நாடுகளின் 416 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. இந்த பட்டியலில் டாப் 10 வரிசையில் பெங்களூரு முதலிடத்திலும், மும்பை 4வது இடத்திலும், புனே 5 வது இடத்திலும், டில்லி 8 வது இடத்திலும் உள்ளன. இவை தவிர பிலிப்பைன்சின் மணிலா, கொலம்பியாவின் போகோடா, ரஷ்யாவின் மாஸ்கோ, பெருவின் லிமா, துருக்கியின் இஸ்தான்புல், இந்தோனேசியாவின் ஜகர்த்தா ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.


latest tamil news



டில்லிவாசிகள் சராசரியாக போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் இயக்க ஆண்டுக்கு கூடுதலாக 190 மணி நேரம் செலவிடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து கூடுதலாக 56 சதவீதம் நேரத்தை செலவிடுகின்றனர். முதலிடத்தில் உள்ள பெங்களூருவாசிகள் கூடுதலாக 71 சதவீதம் நேரம் செலவிடுகின்றனர். மும்பைவாசிகள் 65 மணி நேரம் செலவிடுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X