பெண்களை மசூதியில் அனுமதிக்க தயார்: இஸ்லாமிய அமைப்பு

Updated : ஜன 30, 2020 | Added : ஜன 30, 2020 | கருத்துகள் (47) | |
Advertisement
புதுடில்லி : மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.சபரிமலை கோயில், மசூதிகள், பார்சி வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேட்டதற்கு அகிய இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.



latest tamil news


சபரிமலை கோயில், மசூதிகள், பார்சி வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேட்டதற்கு அகிய இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய தடை இல்லை என்றபோதிலும், கூட்டுத் தொழுகையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இந்த விவகாரம் முற்றிலும் மத வரம்புக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, வழிகாட்டுதல்கள் வழங்குவது சரியாக இருக்காது. இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத விவகாரங்களை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரும் விவகாரங்களில் நான் இணைய முடியாது என குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-ஜன-202009:35:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வட போச்சே..
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
31-ஜன-202009:25:22 IST Report Abuse
sri இஸ்லாமிய அமைப்பு கூறுவது என்னவென்றால் , பெண்களுக்கு தொழுகை மசூதியில் தான் என்று கிடையாது அதனால் அவர்கள் வீட்டிலும் நமாஸ் படிக்கலாம் . மேலும், மசூதி கட்டுப்பாடு அந்தந்த மசூதி மேலாளர் கையில் உள்ளது . இந்த விஷயத்தில் கோர்ட் மூக்கை நுழைக்க தேவையில்லை . இதன்படி , நீதிமன்றம் என்ன சொன்னாலும் , அந்தந்த மசூதி கட்டுப்பாட்டின்படிதான் பெண்களை மசூதியில் அனுமதிக்கலாமா என்று தீர்மானிக்கப்படும். புரிந்தால் சரி. இந்த கோர்ட் விளையாட்டெல்லாம் இந்துமத கோட்பாடுகளுடன்தான்
Rate this:
Cancel
selvam - Madurai,இந்தியா
31-ஜன-202008:37:16 IST Report Abuse
selvam இங்க என்னதான் நம்ம இஸ்லாமிய நண்பர்கள் குண்டாம்குதிருமா முட்டு குடுத்தாலும், நானு கோயில்ல, ச்சர்ச்சுல நம்ம பொண்ணுங்க சர்வ சாதாரணமா வந்து போறத பாக்குற மாதிரி, எந்த மசூதிலயும் பாத்ததில்ல. மத வரம்புக்குள்ளயும் நீதி மன்றம் தலையிட முடிஞ்சா மட்டுமே அத ஜனநாயக நாடுன்னு சொல்ல முடியும், -மதசார்பற்ற- இங்குற வார்த்தைக்கு அர்த்தம் இருக்கும். ஒப்புக்கு நாங்களும் அனுமதிக்கிறோம்ன்னு சொல்லிட்டு அடுத்து பொண்ணுங்கள உள்ள விடமாட்டானுக. இதெல்லாம் உலக ரகசியம், வெளியே யாருக்கும் தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X