சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காபி போடும் அறிவியல்!

Added : ஜன 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
காபி போடும் அறிவியல்!

தீவிர காபி பிரியர்களுக்காக நடத்தப்படும் தொடர் காபிக் கடைகளில், ஏராளமாக காபிதுாளை வீணடிக்கிறார்கள். காபி தொழில், ஏற்கனவே சுற்றுச்சூழலுக்கு சுமையாக இருக்கும் நிலையில், காபி விரயம் என்பது சகிக்க முடியாதது.

இதை சரி செய்யும் நோக்கில், அமெரிக்காவில் உள்ள ஆரிகன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், குறைந்த செலவில் காபி கடைகளில், காபி போட என்ன செய்யலாம் என, ஆராய்ந்துள்ளனர்.

இதற்கென கணித வல்லுனர், பொருள் அறிவியலாளர் மற்றும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த காபி வல்லுனர்களுடன் கூட்டாக ஆராய்ச்சி செய்து, கச்சிதமாக காபி போடும் முறையை உருவாக்கியுள்ளனர்.

இதன்படி, எஸ்பிரசோ வகை காபி போடுவதற்கு வழக்கமான, 20 கிராம் காபிதுாளுக்கு பதிலாக, 15 கிராம் துாள் பயன்படுத்தினாலே அதே மணம், சுவை, திடம் கொண்ட டிகாக்சன் கிடைத்துவிடும் என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேபோல காபி துாளை நைசாக அரைக்காமல், தறுதறுப்பாக அரைத்துப் பயன்படுத்தினால் நல்ல மணம் கிடைப்பதோடு, எஸ்பிரசோ இயந்திரத்தில் கொதிக்கும் நீரை, 25 வினாடிகளுக்கு பதிலாக, 14 நொடிகளுக்குள் பாய்ச்சி டிகாக்சனை எடுத்துவிடலாம் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிறிய மாற்றங்களை செய்தால், அமெரிக்காவில் மட்டும், காபி கடைகள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மிச்சம் பிடிக்கலாம் என, ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
30-ஜன-202021:14:34 IST Report Abuse
கல்யாணராமன் சு. நம்மூரிலே, வீட்டுலெல்லாம் பில்டர் காபி அப்படித்தானே போடறாங்க .......... பொடியை நைசா அரைக்காம, சூடு தண்ணியை ஊத்தி, இரண்டு இல்லே மூணு தரம் டிகாஷன் எடுக்கறோமே .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X