காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜன 31, 2020 | Added : ஜன 31, 2020 | கருத்துகள் (9) | |
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் நகரோட்டா பகுதியில், போலீசாருடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 2 பயங்கரவாதிகள் தப்பி சென்றனர்.காஷ்மீரில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், வந்த டிரக்கை, சோதனைக்காக போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் மறைந்து வந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ் காயமடைந்தார். பதிலுக்கு,
காஷ்மீர், பயங்கரவாதிகள், என்கவுன்டர், சுட்டுக்கொலை, போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் நகரோட்டா பகுதியில், போலீசாருடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 2 பயங்கரவாதிகள் தப்பி சென்றனர்.


latest tamil news


காஷ்மீரில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், வந்த டிரக்கை, சோதனைக்காக போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் மறைந்து வந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ் காயமடைந்தார். பதிலுக்கு, போலீசாரும் திருப்பி சுட துவங்கினர். இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 2 பேர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக, அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement



latest tamil news



இது குறித்து போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், ஸ்ரீநகருக்கு செல்ல முயன்றபோது, மோதல் நடந்தது. இவர்கள், கதுவா, ஹிரா நகர் பகுதி வழியாக ஊடுருவியிருக்கலாம் என தெரிகிறது என்றார்.


latest tamil news



latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X