வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ள நிலையில் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் இன்று (ஜன.,31) காலை 11 மணிக்கு துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து 2020-21 ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2020-21 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.,1) தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த கூட்டத்தொடரின் போது, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ள பிரதமர் மோடி, நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூறி இருந்தார்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே, பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி உள்ளன. காங்., இடைக்கால தலைவர் சோனியா தலைமையில், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கருப்பு சட்டை அணிந்தபடி, கையில் Save India , Save Constitution, No to CAA/NRC/NPR என்ற வாசகத்துடனான பதாகைகளுடன் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE