ராமாயணத்தில் லாஜிக் இல்லை - மிஷ்கின் கண்டுபிடிப்பு

Updated : பிப் 01, 2020 | Added : ஜன 31, 2020 | கருத்துகள் (224)
Advertisement
சென்னை: ‛‛இதிகாச புராணமான ராமாயணத்தில் எந்த லாஜிக்கும் இல்லை'' என்று சினிமா இயக்குனர் மிஷ்கின் பேசினார். சைக்கோ படத்திற்கு வந்த விமர்சனங்களை சமாளிப்பதற்காக மிஷ்கின் இவ்வாறு சம்மந்தம் இல்லாமல் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.மிஷ்கின் இயக்கிய ‛சைக்கோ படம் சமீபத்தில் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இறுதியில் அவனை மன்னிப்பது போல் படம்
Mysskin, Walteraudiolaunch, Ramayanam, Sibiraj, ராமாயணம், மிஷ்கின், வால்டர், சிபிராஜ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ‛‛இதிகாச புராணமான ராமாயணத்தில் எந்த லாஜிக்கும் இல்லை'' என்று சினிமா இயக்குனர் மிஷ்கின் பேசினார். சைக்கோ படத்திற்கு வந்த விமர்சனங்களை சமாளிப்பதற்காக மிஷ்கின் இவ்வாறு சம்மந்தம் இல்லாமல் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மிஷ்கின் இயக்கிய ‛சைக்கோ படம் சமீபத்தில் வெளிவந்தது. கொடூரமான ஒரு சைக்கோ செய்யும் கொலையே கதைக்களம். இறுதியில் அவனை மன்னிப்பது போல் படம் முடியும். இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. இதில் என்ன லாஜிக் உள்ளது என மிஷ்கின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், 60 பேட்டிகளை முடித்துவிட்டு நேற்று தான் பேசாமல் இருந்தேன். 4 கேள்வி தான், அதை 4 ஆயிரம் முறை மாற்றி மாற்றி சொன்னேன். சமூகத்தில் நடக்கும் லாஜிக் பிரச்னைகள். இதில் மிரண்டு போய் உள்ளேன். ராமாயணத்திலேயே எந்த லாஜிக்கும் இல்லை. இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவன் ராவணன். மனைவியை மீட்க ராமன் சண்டை போடுகிறான். தன் பக்கமும் நியாயம் இருப்பதாக எண்ணி ராவணனும் சண்டை போடுகிறான். விபீஷ்ணன், ராமன் கூட இணைகிறான்.


latest tamil news
தனக்கு சாப்பாடு போட்டு உடலை வளர்த்த அண்ணன் ராவணன் கூட இருப்பேன் என்கிறான் கும்பகர்ணன். ராமனிடம் சாகப் போகிறேன் என தெரிந்தும் அண்ணன் உடன் சேர்த்து மடிந்து போவேன் என்கிறான். இவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. போரில் எல்லா ஆயுதங்களும் தீர்ந்து போகிறது. இன்று போய் நாளை வா என்கிறான் ராமன். அதிலும் லாஜிக் இல்லை என்றார்.

ராமாயணத்தில் தனி மனிதன் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் பற்றி எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு ‛சைக்கோ' படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை சமாளிப்பதற்காக ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை என மிஷ்கின் கூறுவது எந்தவகையில் நியாயம் என அங்கிருந்தவர்கள் புலம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (224)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
03-பிப்-202016:41:04 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  குருடன் உளர்றான்.. என்னடா லாஜிக் இல்லை.. ராமனிடம் சாகப் போகிறேன் என தெரிந்தும் அண்ணன் உடன் சேர்த்து மடிந்து போவேன் என்கிறான் - இதுல என்ன லாஜிக் இல்ல? செஞ்சோற்று கடன் என்ற வார்த்தை தெரியுமா அதுதான் இது.. ஒரு நாட்டு வீரன் மற்றோரு நாட்டு வீரனுடன் போரிடும்போது தோற்பது உறுதி என்று தெரிந்தாலும் தொடர்ந்து போராடி சாவான்.. இதுதான் லாஜிக்.. போரில் எல்லா ஆயுதங்களும் தீர்ந்து போகிறது. இன்று போய் நாளை வா என்கிறான் ராமன் - இதுல ஒனக்கு என்னடா லாஜிக் மிஸ் ?? எதிரியுடன் சம பலத்தில் இருக்கும்போது மோத வேண்டும்.. பின்னாடி போயி தாக்குறதுக்கு அவரென்ன மிஷ்கினா? அந்த காலத்தில் போர் நியதிகள் அதிகம்.. மாலை சங்கொலி கேட்டு விட்டால் போர் உடனே நிறுத்தப்படும்.. ஒன்ன மாதிரி குறுக்கு வழியில போயி ஏதாவது செஞ்சா அதுக்கு பேரு லாஜிக்கா? ஒழுங்கா படம் எடுக்க வக்கில்லை.. வெளக்கம் கொடுக்குறாரு ஈர வெங்காயம் ..
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
03-பிப்-202013:22:29 IST Report Abuse
mei ஜப்பானிய, கொரிய படங்களை காப்பியடிக்கிற கொரில்லா எதுக்கு இராமாயணத்தை இழுக்குது?
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
02-பிப்-202019:25:45 IST Report Abuse
T.Senthilsigamani ராமாயணத்தில் லாஜிக் இல்லை - மிஷ்கின் கண்டுபிடிப்பு..தவறான அனுமானம் - அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X