அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறையை காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்

Added : ஜன 31, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னையில், பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மேலிடம் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தன் அறையை காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.சென்னை, தி.நகரில், பா.ஜ., தலைமை அலுவலகமான, கமலாலயம் உள்ளது. இங்கு, மாநில அமைப்பு பொதுச்செயலருக்கு மட்டும், தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள், அலுவலகம் வந்து, பணிகளை கவனித்து

சென்னையில், பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மேலிடம் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தன் அறையை காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.சென்னை, தி.நகரில், பா.ஜ., தலைமை அலுவலகமான, கமலாலயம் உள்ளது. இங்கு, மாநில அமைப்பு பொதுச்செயலருக்கு மட்டும், தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
மற்றவர்கள், அலுவலகம் வந்து, பணிகளை கவனித்து விட்டு, வீடு திரும்புவது வழக்கம்.மாநில தலைவருக்கு என, ஒரு அறை இருந்தது. மாநில தலைவராக இருப்போர், அந்த அறையில் அமர்ந்து, பணிகளை கவனித்தனர்; அங்கேயே தங்குவதற்கு அறை இல்லை.பொன்.ராதாகிருஷ்ணன், தலைவராக இருந்த போது, தனக்கென ஒரு அறையை எடுத்துக் கொண்டார். அவர் அப்பதவியில் இருந்து விலகிய பின்னும், அறையை காலி செய்யவில்லை. மத்திய அமைச்சரானதும், தன் அலுவலக பணிக்காக, மற்றொரு அறையையும் எடுத்துக் கொண்டார்.

தேர்தல் தோல்வி

'வேறு இடம் பார்த்து செல்லுங்கள் அல்லது மாநில அரசிடம் அலுவலகம் கேளுங்கள்' என, கட்சி நிர்வாகிகள் கூறியபோதும், கட்சி அலுவலகத்திலேயே இருந்தார். லோக்சபா தேர்தலில், அவர் தோல்வி அடைந்ததும், மீண்டும் அறை பிரச்னை துவங்கியது. முன்னாள் தலைவர்கள் யாருக்கும், அறை ஒதுக்கப்படாத நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மட்டும், அறை ஒதுக்குவது நியாயமா என, கேள்வி எழுப்பினர். குறிப்பாக, கட்சியின் தேசிய செயலரான எச்.ராஜா, தனக்கு ஒரு அறை வேண்டும் என, போர்க்கொடி துாக்கினார். 'கட்சியில், எந்த பொறுப்பிலும் இல்லாதவருக்கு, அறை ஒதுக்கும் போது, எனக்கு தர மாட்டீர்களா' என, கேள்வி எழுப்பினார்.இது, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும், புதிய மாநில தலைவர் நியமிக்கப்படும் போது, அவருக்கு தனி அறை தேவை என்பதால், கட்சி மேலிடம், பொன்.ராதாகிருஷ்ணனிடம், அறையை காலி செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, இரு வாரமாக, அவர் கட்சி அலுவலகம் வரவில்லை. அவரது உதவியாளர்களிடம், அறையை காலி செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், இதுவரை அறை காலி செய்யப்படவில்லை. அனுமதியில்லைகட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மாநில அமைப்பு பொதுச்செயலர் மட்டும், கட்சி அலுவலகத்தில் தங்கி உள்ளார். கட்சியின் முழு நேர ஊழியர் என்பதால், அவருக்கு தனி அறை உண்டு. அந்த அறையிலும், அவர் இல்லாத நேரத்தில், மற்றவர்கள் தங்குவதுண்டு. அவர், அந்த அறையை பூட்டி வைப்பதில்லை.மூன்றாம் தளத்தில், தேசிய தலைமையில் இருந்து யாராவது வந்தால், தங்குவதற்கு அறைகள் உள்ளன. அதில், அலுவல் வேலையாக வருவோர் தங்குவதுண்டு; நிரந்தரமாக தங்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.மாநில தலைவருக்கு, தனி அறை இல்லாமல் இருந்தது. தமிழிசை தலைவரானதும், பெண் என்பதால், அவர் ஓய்வெடுக்க, தனி அறை வழங்கப்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சரானதும், தன் அலுவலக பயன்பாட்டிற்காக, கூடுதலாக ஒரு அறையை எடுத்துக் கொண்டார். அவர் தங்குவது மட்டும் பிரச்னை அல்ல. அவர் பாதுகாப்புக்காக வரும் போலீசார், உதவியாளர்கள் அனைவருக்கும், உணவு, டீ செலவு, கட்சிப் பணத்தில் செலவிடப்பட்டது. எனவே, அவரிடம் அறையை காலி செய்யும்படி, பல முறை கூறப்பட்டது. அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததும், மற்றவர்களும் அறை கேட்கத் துவங்கினர். அதைத் தொடர்ந்து, அறை விவகாரம், தேசிய தலைமைக்கு சென்றது. கட்சி தலைமை, அறையை காலி செய்யும்படி, பொன்.ராதாகிருஷ்ணனிடம் கூறியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
01-பிப்-202017:24:19 IST Report Abuse
Baskar அம்மாவை பகைத்து கொண்டு தன இழுத்தத்திற்கு ஆடும் ஆடுகளுக்கு வருங்காலத்தில் தமிழகத்திலே இடம் இல்லை
Rate this:
Cancel
G.Sivasubframanian - karur,இந்தியா
01-பிப்-202015:48:00 IST Report Abuse
G.Sivasubframanian சட்டம் எல்லோருக்கும் பொது. தலைவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-பிப்-202010:31:43 IST Report Abuse
Bhaskaran இருக்கும் பத்துபேரில் ஐந்து தலைவர்கள் அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை .நல்லா வளரும் கட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X