பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயியுடன் தான் திருமணம்!' கரம் பிடித்த பெண் இன்ஜினியர்

Updated : பிப் 01, 2020 | Added : பிப் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கண்ணமங்கலம்:'விவசாயியைத் தான் திருமணம் செய்வேன்' என்ற கொள்கையோடு, விவசாயியை தேர்வு செய்து, பெண் இன்ஜினியர் திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், முனியந்தாங்கலை சேர்ந்தவர், லட்சுமணன் மகள் அரசம்மா, 27; இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு, பல இடங்களில் அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். அரசம்மா, 'நான் ஒரு விவசாயியைத் தான் திருமணம் செய்து கொள்வேன்'

கண்ணமங்கலம்:'விவசாயியைத் தான் திருமணம் செய்வேன்' என்ற கொள்கையோடு, விவசாயியை தேர்வு செய்து, பெண் இன்ஜினியர் திருமணம் செய்து கொண்டார்.latest tamil newsதிருவண்ணாமலை மாவட்டம், முனியந்தாங்கலை சேர்ந்தவர், லட்சுமணன் மகள் அரசம்மா, 27; இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு, பல இடங்களில் அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். அரசம்மா, 'நான் ஒரு விவசாயியைத் தான் திருமணம் செய்து கொள்வேன்' என, தீர்க்கமாக கூறிவிட்டார்.


இதையடுத்து, தேப்பனந்தலில் வசிக்கும் லட்சுமணனின் சகோதரி எல்லம்மாள், 65, தன் மகன் விவசாயியான சிவக்குமார், 29, என்பவருக்கு அரசம்மாவை பெண் கேட்டார். இதையடுத்து, 27-ல், சிவகுமாருக்கும், அரசம்மாவுக்கும் திருமணம் நடந்தது. மகளின் ஆசைப்படி லட்சுமணன், மருமகன் சிவகுமாருக்கு, விவசாய பணிக்காக டிராக்டர் மற்றும் டில்லர் வாங்கி கொடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
04-பிப்-202016:16:52 IST Report Abuse
Ramalingam Shanmugam உண்மையில் பாராட்ட வேண்டிய பெண்..
Rate this:
Cancel
munusamyganesan - CHENNAI,இந்தியா
04-பிப்-202015:23:06 IST Report Abuse
munusamyganesan ஹாய், தம்பதியர் பல்லாண்டு வாழ்க. விவசாயம் நம் நாட்டின் உயிர் மூச்சு எனவே பெண்கள் மட்டும் மின்றி படித்த ஆண்களும் விவசாயம் செய்யும் கிராமத்து பெண்களை திருமணம் செய்து விவசாயம் உயிர் கொடுக்க வேண்டும். விவசாயம் வளரும். பெண்கள் வாழ்க்கை நலம் பெரும். இது உண்மை.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-பிப்-202016:37:00 IST Report Abuse
Endrum Indian குழந்தாய் அப்போ ஒண்ணு பண்ணு நீ கற்றதை வீணாக்காதே. விவசாயத்தில் ஏதேனும் உனது பொறியியல் கல்வி அறிவாற்றலை கொண்டு கணவருக்குத் துணையாக ஏதாவது செய்ய முடியுமா என்று நன்றாக யோசி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X