பரவும் காட்டுத்தீயால் ஆஸி.,யில் அவரசநிலை பிரகடனம்

Updated : பிப் 01, 2020 | Added : பிப் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கான்பெரா : ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் காட்டுத்தீயால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீக்கு பல ஆயிரக்கணக்கான மரங்களும் பல்வேறு உயிரினங்களும் இரையாகின. இந்த காட்டுத்தீயால் மக்களின்

கான்பெரா : ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் காட்டுத்தீயால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீக்கு பல ஆயிரக்கணக்கான மரங்களும் பல்வேறு உயிரினங்களும் இரையாகின. இந்த காட்டுத்தீயால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்கு உள்ளாகியது. சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு இடையே உள்ள, ஆஸி.,யின் தலைநகரான கான்பெரா நகரத்திலும் காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீ பரவி வருகிறது. தீயை அணைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் காட்டுத்தீயின் வேகத்தை தணிக்கும் வகையில் கனமழை பெய்து வந்தது.


latest tamil news



மழையை தொடர்ந்து பாதிப்புகள் குறையும் என நம்பப்பட்ட நிலையில், மீண்டும் காட்டுத்தீ ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி வருகிறது. கான்பெராவின் தென்பகுதியில் 18,500 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கிறது. தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நெருங்கி உள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஆன்ட்ரூ பார் கூறுகையில், தலைநகரில் மோசமான காட்டுத்தீ பரவியுள்ளது. தற்போதைய சூழலில் அரசிற்கு இதனை விட வேறு முக்கியமான வேலை இல்லை. கான்பெராவை சுற்றிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

இந்நிலையில் கான்பெராவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நிலவும் வறண்ட வானிலை, அதீத வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், கான்பெரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news



2003ஆம் ஆண்டு இப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டபோது நான்கு பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். 500 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். 470 பேருக்கு மேல் வீட்டை இழந்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekarg - coimbatore,இந்தியா
01-பிப்-202013:10:34 IST Report Abuse
Sekarg தீயய் கட்டுப்படுத்த ஏன் செயற்கை மழை பொழிய வைக்க கூடாது ?
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
01-பிப்-202012:52:47 IST Report Abuse
sridhar கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ள நாடு இது. இவர்கள் துக்கம் என்று சந்தோஷமாக மாறும்??. . ( கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தால் அவர் அப்படி செய்வாராம்). இங்கே ஓயாமல் அற்புதங்கள் செய்யும் Paul தினகரன் , Mohan Lazarus வகையறா இப்படி ஆஸ்திரேலிய கிறிஸ்துவர்களை கை விடலாமா?. போய் அந்த தீயின் நடுவில் நின்று ஜபம் செய்து அந்த நாட்டு கிறிஸ்துவர்களை காப்பாற்றவேண்டும்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
01-பிப்-202012:46:28 IST Report Abuse
S.Baliah Seer இந்த விஞ்ஞான உலகில் காட்டு தீயை அணைக்க பல்வேறு வழிகள் இருந்தும் அதை செய்யாமலும் ,பிற நாடுகளின் உதவியை கோராமலும் இருக்கும் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கை சந்தேகத்தை அளிக்கிறது.காடுகளை அழித்து நாட்டை விஸ்தீரப்படுத்த .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X