வளர்ப்பு நாய்க்காக ரூ 42 கோடி செலவு செய்த அமெரிக்கர்| Dinamalar

வளர்ப்பு நாய்க்காக ரூ 42 கோடி செலவு செய்த அமெரிக்கர்

Updated : பிப் 01, 2020 | Added : பிப் 01, 2020 | கருத்துகள் (6)
Share
விஸ்கான்ஸின்: தன்னுடைய வளர்ப்பு நாய் மீது கொண்ட பாசத்தால், ரூ 42 கோடி செலவு செய்து அமெரிக்கர் ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.அமெரிக்காவின் பிரபல கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் டேவிட் மேக்நெய்ல், ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். சமீபத்தில் அந்த நாய்க்கு இருதயத்தில் கட்டி

விஸ்கான்ஸின்: தன்னுடைய வளர்ப்பு நாய் மீது கொண்ட பாசத்தால், ரூ 42 கோடி செலவு செய்து அமெரிக்கர் ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.



latest tamil news



அமெரிக்காவின் பிரபல கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் டேவிட் மேக்நெய்ல், ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். சமீபத்தில் அந்த நாய்க்கு இருதயத்தில் கட்டி வளர்ந்திருந்ததோடு, ரத்த குழாய் புற்று நோயால் பாதிப்படைந்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் விஸ்கன்ஸின் கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு பின் நாய் பூரண நலம் பெற்றது.

தான் ஆசையாக வளர்த்து வந்த நாய் பூரண நலம் பெற்றதால், மகிழ்ச்சியடைந்த டேவிட் அதை காப்பாற்றிய டாக்டர்களை கவுரவிக்கும் விதமாக சூப்பர் பவுல் கால்பந்தாட்ட போட்டியில், நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ 42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். தன் செல்லப்பிராணியின் மீது டேவிட் மேக்நெயல் வைத்துள்ள அன்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


latest tamil news



இந்த விளம்பரத்தின் மூலமாக விலங்குகள் நோய்க்கான ஆராய்ச்சிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விஸ்கான்ஸின் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மக்கள் நன்கொடை வழங்குவார்கள் என்று தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X